தந்தையின் கைக்குள் ஸ்டாலின்... மகனின் கைக்குள் உதயநிதி... பீதியில் உறையும் தி.மு.க நிர்வாகிகள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Oct, 2018 05:59 pm
stalin-in-t-r-balu-is-arms-udhayanidhi-in-t-r-b-raja-is-arms

தி.மு.க முதன்மை செயலாளரான டி.ஆர். பாலு, அறிவாலயத்தையும், அவரது மகனும், எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜா ஸ்டாலின் வீட்டையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் தி.மு.க நிர்வாகிகள் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு கடந்த சில வாரங்களுக்கு முன் தி.மு.க முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்காக, ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அவர் வால்போஸ்டர்கள் ஒட்டியதில் கருணாநிதியின் படம் இடம்பெறவில்லை. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது வேறு கதை.

இந்நிலையில், தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் தரைத்தளத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் பழனிவேல் தியாகராஜனுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு மாதங்களாக இந்த அறையில் அமர்ந்து கொண்டுதான் கட்சிப் பணிகளை அவர் கவனித்து வந்தார். இந்த அறையில் நவீன வசதிகளோடு வடிவமைத்திருந்தார் தியாகராஜன். இந்நிலையில், அவரிடம் இருந்த அறையை வலுக்கட்டாயமாகப் பெற்று, டி.ஆர்.பாலுவுக்கு ஒதுக்கிவிட்டனர். இதனால், விரக்தியான பழனிவேல் தியாகராஜன் கோபித்துக் கொண்டு  வெளியில் அறையெடுத்து தங்கியிருக்கிறார்.

இதனையடுத்து தினமும் காலை 8:00 மணிக்கெல்லாம் அறிவாலயத்துக்கு வந்துவிடுகிறாராம். மதியம் வரை இருந்து, உள்கட்சி பஞ்சாயத்து, புகார் மனுக்கள் மீது விசாரணை என, கட்சி நிர்வாகம் சம்பந்தமான பணிகளை உடனுக்குடன் முடித்து வைப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ராமநாதபுரம் மாவட்ட கோஷ்டிப்பூசலை தீர்த்து வைத்துள்ளார். இவ்வளவு நாட்களாக, அறிவாலயத்தில், அசைக்க முடியாத சக்தியாக இருந்த மேனேஜர்களுக்கு வேலை வைக்காமல், 'செக்' வைத்து விட்டார் எனவும், அறிவாலயத்தை தன் வசம் கொண்டு வந்துவிட்டதாகவும் தி.மு.க நிர்வாகிகள் புலம்பி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலினிடம் எடுத்துச் சென்றால், ‘’நான்தான் அந்தப் பொறுப்புகளை பார்க்கச் சொன்னேன்’’  என ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்து விடுவதாகக் கூறுகிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கு டி.ஆர்.பாலு அண்ணா அறிவாலயத்தில் உச்சம் பெற்று வரும் நிலையில், இவரது மகன் டி.ஆர்.பி.ராஜா எப்போதும் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் உற்ற தோழனாய் வலம் வருகிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரைத் தாண்டி மு.க.ஸ்டாலின் வீட்டில் அவரை சந்திக்க இயலாத நிலை. 

கோபாலபுரம் இல்லத்திற்குள்ளும் இவர்களைத் தாண்டி யாரும் நுழைய இயலாத நிலை. வீட்டில் மகனாலும், அறிவாலயத்தில் அப்பாவாலும், கட்சி நிர்வாகிகள் கட்டுப்படுத்தப்படுவதால் டி.ஆர்.பாலு மற்றும் அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா மீது ஏக அதிருப்தியில் இருந்து வருகிறார்கள் கழக உடன்பிறப்புகள்’ என புகைச்சலைக் கிளப்புகிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close