எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களைக் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 11:29 am
need-mgr-s-medical-reports-arumugasamy-commision

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், எம்.ஜி.ஆர்-க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருக்கிறது, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். இந்த ஆவணங்களை வரும் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கெடுவும் விதிக்கப் பட்டுள்ளது. 

எம்.ஜி.ஆரை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்து சென்றது போல், ஜெயலலிதாவை அழைத்து செல்வதில் எங்கு சிக்கல் ஏற்பட்டது என்பதை ஒப்பிட்டு பார்ப்பதற்காக அவரின் சிகிச்சை ஆவணங்களை அளிக்குமாறு கேட்டிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். 

34 வருடம் கழித்து எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை தற்போது கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close