நக்கீரன் கோபால் கைது குறித்து தம்பிதுரை என்ன சொல்கிறார்?

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 01:19 pm
admk-mp-thambi-durai-press-meet

பத்திரிகையில் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் தேவை தான், ஆனால் அதனை தவறாக பயன்படுத்தக்கூடாது என அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க எம்.பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று கரூரில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.  அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது குறித்து கேட்டதற்கு, "ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரம் என்பது கண்டிப்பாக தேவை. அதற்காக அதனை தவறாக பயன்படுத்தக்கூடாது. பத்திரிகை சுதந்திரம் தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்கிறது" என்றார். 

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பதிலளிக்கையில், "கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். 

மேலும், 'தனித்துப் போட்டி' என்று பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுகவைத் தான் குறிப்பிடுகிறார். என்னை குறிப்பிடவில்லை" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close