எடப்பாடி அரசை கவிழ்க்கிறார் ஓ.பி.எஸ்..!? திடுக்கிட வைக்கும் உண்மை நிலவரம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Oct, 2018 04:31 pm
ops-s-plan-to-dissolve-the-edappadi-palanisamy-state-government

ஓ.பி.எஸ் தரப்பில் இருந்த ஆதரவு எம்.எல்.ஏக்களில் தற்போது ஒருவர் கூட இல்லாததால் அவரை மொத்தமாக ஓரம் கட்ட எடப்பாடி தரப்பு முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

 சசிகலா தலைமையை ஏற்றுக்கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வத்தையும் சேர்ந்து 11 எம்.எல்.ஏக்கள் வெளியேறினர். 
இந்த 10 எம்.எல்.ஏக்களும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்தனர். எடப்பாடி பழனிசாமி அணிக்கெதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி அணிக்கு எதிராகவே வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்தன.பிறகு ஓ.பி.எஸ் துணை முதல்வராக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-வான மஃபா.பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தனக்கான பதவியையும், தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வதில் மட்டுமே தீவிரம் காட்டிய ஓ.பன்னீர்செல்வத்தின் போக்கில் அவருக்கு ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்கள் ஆதிருப்தி அடைந்தனர். அவரது ஆதரவாளர்களின் கோரிக்கைகளை செவி கொடுத்துக் கூட கேட்க முடியாத நிலையில் ஓ.பி.எஸ் செயல்பட்டதால் வெறுத்துப்போன ஆதரவு எம்.எல்.ஏக்களில் இப்போது ஒருவர் கூட ஓ.பி.எஸ்-க்கு சப்போர்ட்டாக இல்லை என்பதே நிதர்சனம்.  

ஒருவேளை அந்த 10 எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ்க்கு பக்கபலமாக இருந்திருந்தால் ஓ.பி.எஸ் நிராகரிக்கப்படும் சூழலுக்கு ஆளாகி இருக்க மாட்டார். அப்படியே நிரகாரிக்கப்பட்டாலும் மெஜாரிட்டியை நிரூபிக்க மன்றாடி வரும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியையே ஓ.பிஎஸால் கவிழ்த்து விட முடியும். ஆனால், அதனை இப்போது ஓ.பி.எஸ் நினைத்தாலும் செய்ய இயலாது. ஓ.பி.எஸ் என்ற ஒற்றை எம்.எல்.ஏவால் இந்த ஆட்சிக்கு எந்தப் பாதகமும் நிகழ்ந்து விடப்போவதில்லை என்கிற நிலை. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருந்த எம்.எல்.ஏக்கள் எப்போதோ மனதளவில் அணி மாறி விட்டனர். 

பதவிக்காக மவுனம் காத்து வருகின்றனர். ஓ.பி.எஸ் வெளியேற்றப்பட்டால் அவருக்கு ஆதரவாக ஒரு. எம்.எல்.ஏ கூட பின்னால் செல்ல மாட்டார்கள் என்பதே கள நிலவரம். ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவரையும் சேர்த்து மொத்தம் 11 பேர். அதில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுகுட்டி, பல மாதங்களுக்கு முன்பே எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-வாக மாறி விட்டார். முன்னாள் அமைச்சரான ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகநாதன், சமீபத்தில் வெளிப்படையாக பேட்டியளித்தார் அதில்,   துணை முதலமைச்சர் ஓ.பி.எஸும், முதலமைச்சர் எடப்பாடியும்  கட்சியை அழிக்க நினைக்கிறார்கள்’’ எனக் குற்றம் சாட்டினார். இதன் பின்னணியில் டி.டி.வி.தினகரன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆக, அவரது ஆதரவும் இப்போது ஓ.பி.எஸ்க்கு இல்லை. 

                         முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சண்முகநாதன்

ஓ.பி.எஸ்ஸை முதன்முதலாக ஆதரித்த எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம். கடந்த ஆண்டே டி.டி.வி.தினகரனை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. தலித் எம்.எல்.ஏ-வான வாசுதேவநல்லூர் தொகுதி மனோகரன், தங்களது சாதி எம்.எல்.ஏக்களின் பலத்தை வைத்து எடப்பாடியிடம் அமைச்சர் பதவி கேட்டு வருகிறார். அமைச்சர் பதவியில் கண்ணாக இருக்கும் அவரது ஆதரவும் தற்போது ஓ.பி.எஸ்-க்கு இல்லை. ஆவடி தொகுதி எம்.எல்.ஏ-வான மஃபா.பாண்டியராஜன் அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு எடப்பாடி ஆதரவாளராகவே மாறிவிட்டார்.  

                                                  மோடியுடன் சரவணன் எம்.எல்.ஏ

மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன். கூவாத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தந்தவர். சவுராஷ்டிரா இனத்தைச் சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் புதுச்சேரியில் பிரதமர் மோடியை சந்தித்தித்துப் பேசினார். அதிமுகவுக்குள் இன்னும் சிலரையும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக மாற்ற, பா.ஜ.க நேரடியாக உடைப்பு வேலைகளை செய்து வருகிறது என்கிறார்கள்.
திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை. சட்டமன்ற ஆய்வு குழு தலைவர் பதவி கொடுத்து ஓ.பி.எஸ் மடக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

                                    எடப்பாடியுடன் எம்.எல்.ஏ ஆறுகுட்டி

மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ சின்னராஜ். இவரையும் ஓ.பி.எஸ் தரப்பு தங்கள் வசப்படுத்தி விட்டது. முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ். இவர் ஆரம்பத்தில் இருந்தே ஓ.பி.எஸின் தீவிர ஆதரவாளரில்லை  என்பதை வெளிக்காட்டி வருகிறார். தனக்கு வாக்களித்த தொகுதி மக்களின் நலன் மட்டுமே முக்கியம் எனக்கூறி வருகிறார். அடுத்து சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தார். ஆகையால், யார் பக்கம் என்பது முக்கியமல்ல. தொகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் இருப்பதால் இப்போது ஓ.பி.எஸ் பக்கம் போக வாய்ப்பில்லை. 

இதையெல்லாம் அறிந்தே ஓ.பி.எஸ்ஸை ஓரம் கட்ட எடப்பாடி பழனிசாமி அணி காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close