சீமான் - பா.ரஞ்சித்தின் பகை முடித்த பரியேறும் பெருமாள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Oct, 2018 06:29 pm
seeman-forgets-about-director-ranjith

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், இயக்குநர் பா.ரஞ்சித்தும் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டதை நாடே சற்று திகிலோடுதான் கவனித்தது.

’’போராடுகிற எல்லோரும் அனிதாவை தங்கையாகப் பார்க்கிறார்கள். நீங்கள் தலித் ஆகப் பார்க்கிறீர்கள். இது உங்கள் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது. நாங்க தமிழனா பார்க்கிறோம், நீங்க தலித்தா பார்க்கிறீங்க, நீங்க தமிழனா தலித்தா? அவன் ஒரு ஆளு அவன பத்தி என்கிட்ட கேட்கிறீங்க, அவன் என்ன அம்பேத்காரா?’ என்று இயக்குநர் ரஞ்சித் மீது கோபப்பட்டார் சீமான்.

வார்த்தைகளால் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர் ரஞ்சித் ஆதரவாளர்கள். பல நாட்களாக குமுறிக்கொண்டிருந்த இரு தரப்பு ஆதரவாளர்களின் பகையையும் ‘பரியேறும் பெருமாள்’ வந்து தீர்த்து வைத்திருக்கிறது.  இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்றுக்கு வந்த சீமானை, அப்படத்தின் தயாரிப்பாளரான பா.ரஞ்சித் வரவேற்றார்.

அங்கே விழுந்தது முதல் புன்னகை. அதற்கப்புறம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த சீமான், அப்படியே ரஞ்சித்தையும் இயக்குனர் மாரி செல்வராஜையும் கட்டிப்பிடித்து தன் பாராட்டுகளை தெரிவிக்க... போன இடம் தெரியாமல் மறைந்தது பகை. பரியேறும் பெருமாள் செய்ய வேண்டிய மாற்றங்கள் இதோடு முடியாது. இப்போது இருவரது ஆதரவாளர்களும் பரஸ்பரம் நட்பு பாராட்டி வருகிறார்கள்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close