ஒரு லட்சம் பேரை தி.மு.க-விலிருந்து விலக்கும் மு.க.அழகிரி... ஸ்டாலினுக்கு செக்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Oct, 2018 07:06 pm
m-k-azhagiri-lock-to-stalin

மீண்டும் தி.மு.க-வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொள்ளக் கோரி தனது இளவளிடம் மன்றாடி வருகிறார் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி. இந்த முறை ஒரு லட்சம் தி.மு.க உறுப்பினர்களை கட்சியை விட்டு வெளியேற்றும் திட்டத்தை கையெலெடுத்திருக்கிறார் மு.க.அழகிரி.

தனது பலத்தை நிரூபிக்க கடந்த மாதம் 5ம் தேதி சென்னை, மெரினாவில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேரை திரட்டிக் காட்டுவதாக சவால் விட்டிருந்தார். ஆனால், சொற்ப அளவிலேயே ஆதரவாளர்கள் கூடினர். ஆனால், அதன் பிறகும் மவுனம் காட்டி வருகிறார் மு.க.ஸ்டாலின். இதனால் வெறுத்துப்போன அழகிரி இடைத்தேர்தல்களில் தி.மு.க-விற்கு குடைச்சல் கொடுக்கலாம் என திட்டமிட்டிருந்தார். இதனை உணர்ந்த ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக தேர்தல் நடத்தக் கூடாது என தி.மு.க சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 

இதனால், இடைத்தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.   இதனால், மேலும், ஆத்திரத்தில் இருக்கிறார் அஞ்சாநெஞ்சன். இப்போது அடுத்த திட்டத்திற்கு தயாராகி விட்டார் அவர். அடுத்த திட்டம் கையெழுத்து இயக்கம். ஒரு லட்சம் தி.மு.க உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் திட்டதை ஆரம்பித்து இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதுவரை 10 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்களாம். கையெழுத்து போடுபவர்களிடம் அவர்களது உறுப்பினர் அடையாள அட்டையின் நகலையும் இணைக்கக்கோருகிறார்கள். 

இதனால், அழகிரியை நம்பி எங்கே கட்சியை விட்டு நீக்கப்படுவோமோ என அச்சத்தில் சிலர் இதற்கு சம்மதிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், அழகிரி ஆதரவாளர்கள் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்கள். ஒரு லட்சம் பேரிடம் பெறும் கையெழுத்துப் பிரதியை  வரும் 20ம் தேதிக்குள் அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வந்து கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஒருவேளை தனக்காக கையெழுத்து போடும் ஒரு லட்சம் பேரை கட்சியில் இருந்து நீக்கினால், அது மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.கவுக்கும் இழப்பு. இதுவும் ஒரு வகையிலான நெருக்கடிதான் என அழகிரி நினைக்கிறார்’’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  

ஆக, அடுத்தடுத்த ஆட்டத்தை தொடங்கி வருகிறார் மு.க.அழகிரி. ஆனால், மு.க.ஸ்டாலின் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close