பா.ம.க-வை ஒழிக்க படை திரளும் வன்னியர் கூட்டமைப்பு: ராமதாஸ் அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Oct, 2018 12:32 pm
vanniyar-sangam-to-eradicate-pmk-ramadoss-shocked

பா.ம.க.வை டாக்டர் ராமதாஸ் தொடங்கியபோது வன்னியர்களின் முகமாக பார்க்கப்பட்டார் அவர். தன் அரசியல் வாரிசாக என்றைக்கு, தன் மகன் அன்புமணியை  ஆசீர்வதித்தாரோ அன்றைக்கே வன்னிய சமூகம் ராமதாசிடம் இருந்து படிப்படியாக விலக ஆரம்பித்து வருகிறது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமதாசை முழுமையாக தனிமைப்படுத்தும் முயற்சியில் முனைப்புக் காட்டி வருகிறார் சி.என்.ஆர். என்று அழைக்கப்படும் சி.என்.ராமமூர்த்தி.

யார் இந்த  சி.என்.ராமமூர்த்தி?
1980 களில் தொடங்கியது இவரது போராட்ட வாழ்க்கை. ஆறாண்டு காலம் தமிழகத்தில் வன்னியர் வாழுமிடம் எல்லாம் சென்று தங்கி அவர்களை வன்னியர் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி, தங்கள் சமூக இட ஒதுக்கீட்டுக்கான சாலை மறியல் போராட்ட களத்துக்கு  தயார்படுத்தியவர். 25 உயிர்களை களப்பலி கொடுத்த அந்த போராட்டம் இன்றளவும் பேசப்படுகிறது. பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி உருவாகக் காரணகர்த்தாவாக இருந்தவர் சி.என்.ஆர். அந்தக் கட்சியின் உருவாக்கத்தில் இவருக்கு பெரும் பங்குண்டு.

ராமதாசின் எதேச்சதிகார போக்கால் அங்கிருந்து விலகி, பல்வேறு வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து ’வன்னியர் கூட்டமைப்பு’ என்ற சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்கி அதன் நிறுவனத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது முயற்சியால் தான், கருணாநிதி ஆட்சியில் வன்னியர் உள்ளிட்ட 107 சாதிகளை இணைத்து மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான  20 சதவீத  இடஒதுக்கிடு கொடுக்கப்பட்டது.
இவரது தற்போதைய இலக்கு, வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு. இதற்காக ராமதாஸ் தவிர்த்த வன்னியர்களை ஒருங்கிணைத்து செயல்படும் சி.என்.ஆர், ’தங்கள் சமூகத்தின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கே மக்களவை தேர்தலில்  வன்னியர்களின் ஆதரவு’ என்று பிரகடனம் செய்து வருகிறார். 

20 தொகுதிகளில் வெற்றி -தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக வன்னியர் வாக்கு வங்கி இருப்பதால், சி.என்.ஆரின் கோரிக்கை மக்களவை தேர்தலில் பிரதான பேசு பொருளாக பரவ ஆரம்பித்திருக்கிறது. காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் ராமதாஸுக்கு எதிராக படை திரள்வதால் பா.ம.க நிலை மக்களவைத் தேர்தலில் கேள்விக்குறியாவது நிச்சயம் என்கிறார்கள் வன்னியர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close