சீமான் பிரபாகரனை சந்தித்தாரா? ஆமைக்கறி சாப்பிட்டாரா..? அதிர வைக்கும் உண்மை!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Oct, 2018 01:45 pm
is-it-true-that-seeman-had-eaten-the-tortoise

’’விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, சீமான் சந்தித்தது உண்மை. அதை நேரில் பார்த்தவன் நான்’’ என இயக்குநர் ஜி.டி.நந்து தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிக்க இருந்த கெட்டவன் படத்தை இயக்க இருந்தவர் இயக்குநர் ஜி.டி.நந்து. விடுதலைப்புலிகள் தயாரித்த ’எல்லாளன்’ படத்தை இலங்கைக்கு சென்று இயக்கிக் கொடுத்தவர். சீமான், குறித்தும் எல்லாளன் படத்தை இயக்கியபோது இலங்கையில் நடந்த அநுபவங்கள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.

 

                                                                                       ஜி.டி.நந்து

விடுதலைப்புலிகள் தயாரித்த எல்லாளன் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அண்ணன் சீமான் அந்தப்படத்தை துவக்கி வைக்க இலங்கை வந்தார். 15 நாட்கள் அங்கே தங்கி இருந்தார். 2008-ம் ஆண்டு  போர் நடந்து கொண்டிருந்த கால கட்டம் அது. இயக்குநர் மகேந்திரன், ஏற்கெனவே போயிருக்கிறார். அவரது மகன் ஜான்  ’ஆணிவேர்’ என்கிற திரைப்படத்தை விடுதலைப்புலிகளுக்காக ஏற்கெனவே இயக்கிக் கொடுத்திருக்கிறார்.  இயக்குநர் பாரதிராஜா, வைகோ உள்ளிட்டவர்கள் எல்லாம் அமைதியான சூழலில்தான் அங்கே போயிருந்தார்கள். 
நான் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவனோ, அல்லது சீமானின் ஆதரவாளனோ கிடையாது.

ஆனால், அவர் இலங்கைக்கு வந்தது உண்மை. அவர் தமிழ் பற்றாளனாய் இருந்ததால் விடுதலைப்புலிகளுக்கு மத்தியில் உரையாற்ற அழைத்திருந்தனர். 5 நாட்கள் மட்டுமே தங்குவதாக திட்டமிட்டு இருந்த சீமானக்கு அந்த சூழல் பிடித்துப்போனதால் 15 நாட்கள் தங்கியிருந்தார். அப்போது, விடுதலைப்புகளிடம், உங்களுடைய சீருடையை போட்டுப் பார்க்கணும். எனக்கு ஆசையாக இருக்கு’ எனக்கேட்டார். அதற்கு ‘இல்லை... இந்த சீருடையை அணிய பல தேர்வுகள் நடக்கும். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதலில் இணைய வேண்டும் என்றால் அதற்கு முன்பாக பலகட்டப் பயிற்சிகள் நடத்தப்படும் அதில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகே இந்த ஆடையை நீங்கள் அணிய முடியும்’ எனக் கூறினர். அதையும் சீமான் ஏற்றுக்கொண்டு பயிற்சியை முடித்த பிறகே அந்த ஆடையை அணிந்தார். துப்பாக்கி எல்லாம் சுட்டு பழகினார். மிகவும் சக்தி வாய்ந்த பறக்கும் விமானத்தையே சுட்டு வீழ்த்தும் ஏ.கே.காலிபர் வகை துப்பாக்கியை வைத்தும் பயிற்சி செய்தார். மூன்று நாட்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் தங்கி இருந்தார். அதை நேரில் பார்த்தவன் நான். பிரபாகரனே சீமானை நேரில் வந்து அழைத்துப்போனார். 
பிரபாகரனுடன், சீமான் போட்டோ எடுத்ததெல்லாம் உண்மை. ஆனால், எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சீமான் பயிற்சி பெறும்போது எடுத்த போட்டோக்களையும் வைத்திருக்கிறார். ஆனால், அதனை அவர் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை’’ என்றார்.

சீமான் ஆமைக்கறி சாப்பிட்டாரா? எனக்கேட்டால், ‘’போர் ஆரம்பிக்கும்போது அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைத்தது. போர் உச்சமடையும் நிலையில் கெட்டுப்போன ரொட்டிகள் கூட கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் சீமான் அங்கிருந்து கிளம்பி விட்டார். அடுத்து நம்ம கறியே மிஞ்சுமா என்கிற நிலைமை அங்கே உருவாகி விட்டது. சீமானை மிகவும் மரியாதைக்குரியவராக  விடுதலைப்புலிகள் அழைத்து வந்தார்கள். அவர் அங்கு வந்த போது போர் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த சூழலை சீமானுக்கு அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை. தங்களது கஷ்டங்களை மறைத்து  மிகவும் பாதுகாப்பாக தங்க வைத்து சீமானை அனுப்பி வைத்தனர்’’ என்கிறார் ஜி.டி.நந்து. 

இறுதிவரை சீமான் ஆமைக்கறி சாப்பிட்டாரா என்கிற ரகசியத்தை மட்டும் அவர் சொல்லவேயில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close