பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி கொடுக்கும் எடப்பாடி... மு.க.ஸ்டாலின் பதற்றம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Oct, 2018 05:07 pm
eadappadi-is-shocking-to-the-bjp

முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து ராமநாதபுரம் தொகுதி எம்.பி., எஸ். அன்வர் ராஜா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை புத்தக வெளியீட்டு விழாவாக அ.தி.மு.க சார்பில் நடக்க இருப்பது அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. 

முத்தலாக் சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் கொண்டுவரப்பட்டபோது அதை அ.தி.மு.க கடுமையாக எதிர்த்தது. அதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஒட்டிய விவாதத்தில் அதிமுக எம்பி., அன்வர் ராஜா பேசினார். ‘இதுவரை யாரும் செய்யாத வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஆள நீங்கள் முயற்சி செய்துவருகிறீர்கள். 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்த அவையில் உரையாற்றிய டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர், ’முஸ்லிம் சமூகத்தினர் கிளர்ந்து எழும் வகையில் எந்த அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு ஒரு அரசு செயல்படுமானால் அது புத்திசுவாதீனமற்ற அரசாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன்’ என்று கூறினார். அம்பேத்கர் சொன்னதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். படித்தவன் தவறு செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்று மகாகவி பாரதியார் சொல்லியிருக்கிறார். நீங்கள் வேண்டுமென்றே தவறு இழைக்கிறீர்கள். உங்கள் முயற்சி வெற்றி பெறப்போவதில்லை’ என்று பேசினார் அன்வர் ராஜா. இந்த உரை உட்பட நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா ஆற்றிய உரைகளைத் தொகுத்து, ‘முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல்’ என்ற தலைப்பில் புத்தகமாக ஆக்கியிருக்கிறார்கள்.

அன்வர் ராஜாவின் ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் புதுமடம் ஜாபர் அலி இந்தப் புத்தகத்தை தொகுத்து வெளியிடுகிறார். சில மாதங்களுக்கு முன்பேஇந்த புத்தகம் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது.  அண்மையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வரிடம், ‘பாஜகவிடம் நாம் ஓவராக ஒட்டுகிறோம் என்ற பேச்சு அதிகமாகியிருக்கிறது. திமுக மீதும் மக்களுக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. இந்த காரணத்தால்தான் ஆர்.கே.நகரில் நாம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை மொத்தமாக தினகரனிடம் பறிகொடுத்தோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் தொடர்ச்சியாக அன்வர் ராஜாவைத் தொடர்புகொண்ட எடப்பாடி பழனிசாமி, அந்த முத்தலாக் புத்தகத்தை வெளியிடலாம் எனக் கூறியிருக்கிறார். 

வரும் அக்டோபர் 22-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல் என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த விழா அழைப்பிதழில் முதல்வர், துணை முதல்வர் பெயர்கள் இல்லை. ஆனாலும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையேற்று வெளியிடுகிறார். இந்த விழாவை அதிமுக முக்கியமாக கருதுகிறது என்பதற்காக செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், நிலோபர் கபில் ஆகிய ஆறு அமைச்சர்களையும் வாழ்த்துரை வழங்குமாறு முதல்வரே கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வும் கலந்துகொள்கிறார். அதுமட்டுமல்ல.. இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ.வான முகமது அபுபக்கர், திமுக கூட்டணியோடு இணைந்து செயல்பட்டு வரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தலைவர் தெகலான் பாகவி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். இதன் மூலம் திமுகவுக்கும் ஷாக் கொடுக்க நினைக்கிறது அதிமுக.

இந்த புத்தக வெளியீட்டுவிழா மேடையில் பாஜகவுக்கு எதிரான கடுமையான பேச்சுகள் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close