’விஜய் கூத்தாடி தளபதியா...?’ கலாநிதி மாறனால் இத்தனை துரோகங்களா..? தி.மு.க கதறல்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Oct, 2018 05:36 pm
vijay-koothadi-is-a-thalapathy-dmk-fears

சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் மேடையேறியபோது ’தளபதி... தளபதி‘ என பின்னால் ஒலி எழுப்பியதற்காக கடும் ஆத்திரமடைந்துள்ள தி.மு.க.வினர் கலாநிதி மாறனை துரோகியாக சித்தரிக்கத் தொடங்கியுள்ளனர்.  

சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிக்கும் படம் சர்கார். இந்தப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதால் பட ப்ரமோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜயை தளபதி என ப்ரமோட் செய்வதில் கலாநிதிமாறன் அதிக அக்கறை காட்டுவதாகவும், ஸ்டாலின் மட்டுமே தளபதி என்றும் விஜய்க்கும், கலாநிதி மாறனுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
இது குறித்து தி.மு.க-வை சேர்ந்த டெல்டா ராஜா என்பவர் ’வாழ்த்துக்கள் துரோகிகளே!’ எனத் தலைப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ’திமுக தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி வளர்ந்த மாறன் பிரதர்ஸ். வாழ்த்துக்கள் துரோகிகளே! ஒரு ரூபாய்க்கு தினகரன் நாளிதழை ஆரம்பித்து ஒட்டுமொத்த பத்திரிக்கை துறையினரையும் திமுகவிற்கு எதிராக திசை திருப்பி...
சினிமாத் தயாரிப்பில் இறங்கி அமோக வளர்ச்சி பெற்று சாதாரண தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி, தலைவருடன் இணக்கமாக இருந்த திரைத் துறையினரை திமுகவிற்கு எதிராக திசை திருப்பி...
கேபிள் உரிமையை கையில் எடுத்துக் கொண்டு இருபத்தி நான்கு மணி நேரமும் இலவச சினிமாப் படங்களை ஒளிபரப்பு செய்து, ஒட்டு மொத்த ஊடகங்களையும் திமுகவிற்கு எதிராக திசை திருப்பி...

குடும்ப அரசியல் என்ற பழிச்சொல்லுக்கு தலைவரை ஆளாக்கி... தலைவர் தடுத்தும் கேளாமல் சர்வே என்ற பெயரில் சாதுர்யமாக தங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டதனால் தீ வைப்பு என்ற வரலாற்றுக் கறையை உருவாக்கி...
2ஜி அலைக்கற்றை வழக்கினை காழ்ப்புணர்ச்சியால் பிரபலப்படுத்தி... ஒட்டுமொத்தமாக கழக ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த போதிலும், உங்களை எங்கள் தலைவர் நெஞ்சில் சுமந்ததற்கு முதுகில் குத்தும் மாறனின் மகன்களே வாழ்த்துக்கள்!

எதிர்க்கட்சிக்காரர்கள் கூ எங்கள் தளபதியை தளபதி என்று அழைக்கும் போது, தளபதி என்றால் நீங்கள் தான் என்று ஒரு கூத்தாடியைப் பார்த்து கூப்பாடு போடும் குலத்துரோகிகளே! எத்தனை வன்மம் இருந்தால் இப்படி கூறுவீர்கள்? ஒவ்வொரு திமுக-காரனின் ரத்தத்தில் வளர்ந்தது தான் உங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் மறந்தாலும், வரலாறு மறைக்காது.

இருந்தாலும் துரோகம் தொடரட்டும். துரோகம் தான் எங்கள் தலைவரை வளர்த்தது.தளபதியையும் வளர்க்கட்டும். வளர்ப்போம். ஆம். நாங்கள் மட்டும் தான் எங்கள் தளபதிக்கு எனும் போது, இன்னும் ப்ரியம் கூடுகிறது. வாழ்த்துக்கள் துரோகிகளே!’ எனப்பதிவிட்டுள்ளார். இதுபோன்ற பல காட்டமான பதிவுகளை மாறன் சகோதரர்களுக்கு எதிராக தி.மு.க-வினர் பதிவிட்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close