வைரமுத்து மீது சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு மீது விசாரணை தேவை: தமிழிசை அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2018 11:13 am
tamilisai-soundararajan-press-meet

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடர்ந்து எழுப்பி வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பெண்களுக்கு அநீதி இழைக்கும் நபர்கள் எத்தகைய அதிகாரம்  வாய்ந்த நபராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

இன்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே கூறி வருகின்றனர். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் யார் அந்த அதிகாரத்தில் இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். வைரமுத்து மீது சின்மயி  தொடர்ந்து எழுப்பி வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எஸ்.வி. சேகர் விவகாரத்தில் பேசிய பலர், தற்போது பெண்கள் நேரடி புகார் அளித்து வரும் நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு நடைபெற்றுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த தமிழிசை, "ஊழல் குற்றச்சாட்டை எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது, அது விசாரிக்கப்பட வேண்டும். இதற்காக உடனே அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவது சரியல்ல. தி.மு.க போன்ற கட்சிகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடன் பதவி விலகினார்களா?" என பதிலளித்துப்  பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close