ஆட்சியைக் கைப்பற்ற ஸ்டாலின் ஆயத்தம்... எடப்பாடி அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 13 Oct, 2018 02:24 pm
stalin-s-preparation-to-take-over-the-cm-edappadi-shocking

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போனது திமுக. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், முகாந்திரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. 

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்தான் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு வரும் என எடப்பாடி தரப்பு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தது. ஆனால், இப்போது வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியதால், அதிர்ச்சியாகி இருக்கிறார் எடப்பாடி. ‘ஏற்கெனவே நமக்கெதிராக மத்திய அரசு  அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போ இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாத்திட்டாங்க. இனி அவங்க வைக்கிறதுதான் சட்டம்னு பேசுவாங்க. அவங்க சொல்றதை கேட்கலைன்னா குடைச்சல் கொடுப்பாங்க’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

எடப்பாடி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது திமுகவினரை அதிக மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதே நாளில் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதை விட திமுக தரப்புக்கு மகிழ்ச்சி கொடுத்திருப்பது எடப்பாடி மீதான தீர்ப்புதான். இதுபற்றி திமுகவினரிடம் ஆலோசித்த ஸ்டாலின், ‘இனி நமக்கு எல்லாமே வெற்றிதான்.

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பும் சீக்கிரம் வந்துடும். அதையடுத்து ஆட்சிக்கு ஆபத்து வந்துடும். தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் மூலமாக இந்த ஆட்சியை வீழ்த்திடலாம். எடப்பாடி போலவே நாம் ஏற்கனவே வழக்கு போட்ட விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, டிஜிபி ராஜேந்திரன் என இந்த ஆட்சி சம்பந்தப்பட்டவங்க அனைவரது மீதான புகார் பத்தியும் மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லணும்’ என்று சொல்லிவிட்டு உடனே வழக்குத் தொடுத்தவர் என்ற முறையில் ஆலந்தூர் பாரதியை பிரஸ் மீட் வைக்கச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

’’இது நமக்கு மிகப்பெரிய வெற்றி. எடப்பாடி வசமாக பொறியில் சிக்கியிருக்கிறார். இவரைப் போலவே மற்ற ஊழல் அமைச்சர்களையும் சிக்க வைக்கணும். ஆனா அதை திமுக மட்டும் செஞ்சா மக்களிடம் இந்த ஆட்சியைப் பத்திய அதிருப்தியை முழுசா கொண்டுபோய் சேர்க்க முடியாது. அதனால எல்லா கட்சிகளையும் இந்த ஆபரேஷனில் சேர்த்துக்குவோம். திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து எடப்பாடி அரசுக்கு எதிராக தொடர்ந்து பிரசார இயக்கத்தை நடத்துவோம்’என்று  தி.மு.க சீனியர்கள் எடுத்துச் சொல்ல, அதற்கு ஸ்டாலினும் சம்மதித்திருக்கிறாராம் .

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close