சி.பி.ஐ விசாரணை... கொண்டாடும் ஓ.பி.எஸ்... திண்டாடும் இ.பி.எஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 13 Oct, 2018 03:45 pm
cbi-investigations-celebrate-ops

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டிருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அணி மகிழ்ச்சியாக இருக்கிறதாம்.

’ஓ.பன்னீர்செல்வம் என்னை வந்து சந்தித்தார்’ என்று தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னதும், அதற்கு ஓ.பி.எஸ் விளக்கம் கொடுத்ததும் தெரிந்ததும் அறிந்ததே. ஆனால், தினகரன் அப்படியான ஒரு புகாரை சொன்ன பிறகு உளவுத் துறை மூலமாக விசாரித்திருக்கிறார் எடப்பாடி. உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட்டில், ‘தர்மயுத்தத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் கூட, உங்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை தொடர்ந்து செய்திருக்கிறார். தினகரன் சொல்வது உண்மைதான்!’ என்று கொடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த பிறகு ஓ.பி.எஸ் மீதான கோபம் எடப்பாடிக்கு அதிகரித்து இருக்கிறது. 

இந்த நிலையில்தான் தன்னிலை விளக்கம் கொடுக்க, எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்டாராம் ஓ.பி. எஸ். ஆனால், எடப்பாடியோ, இதுவரை சந்திக்க நேரம் ஒதுக்கவே இல்லையாம். நேற்று எடப்பாடி வழக்கு சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றப்பட்ட தகவலை கேள்விப்பட்டிருக்கிறார் ஓ.பிஎஸ்.

‘ஒரு சிக்கல் வந்தால் எப்படியெல்லாம் கஷ்டம் வரும்னு இப்போ அவருக்குப் புரியும்’ என்று அவரோடு இருந்த நிர்வாகிகள் சிலர் கமெண்ட் அடித்திருக்கிறார்கள். கூடவே எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை ஓ.பி.எஸ் தரப்பு உள்ளுக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close