சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவி ஆவேசம்!

  Newstm Desk   | Last Modified : 16 Oct, 2018 01:10 pm
will-face-legally-says-student-malathi

பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவை மாணவி, தன்னை சஸ்பெண்ட் செய்தது சட்ட விரோதம் என்றும், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். 

கோவை அரசு கலைக் கல்லூரியில்  எம்.ஏ வரலாறு முதலாமாண்டு படித்து வருபவர் மாலதி. இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தனது சக தோழிகளுடன் பகத் சிங்கின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் பகத் சிங் பற்றியும் கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்நிலையில் பகத் சிங்கின் பிறந்தநாளை கொண்டாடியதால் அந்த மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பு கூறுகையில், "முறையான அனுமதி பெறாமல் கல்லூரி மாணவிகளை ஒன்றிணைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும், பகத் சிங் குறித்த உரையாடலின் போது கல்லூரியின் குறைபாடுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இதன் காரணமாக  மாணவி மாலதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து மாலதி கூறுகையில், "என்னை சஸ்பெண்ட் செய்தது சட்டவிரோதம். பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடியது தவறா? இந்த சமூகத்தில் பேசுவதற்கு கூட உரிமையில்லையா? எங்களது கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், இதுகுறித்தும் நாங்கள் விவாதித்தது உண்மை தான்.  இந்த விவகாரத்தில், என்னை சஸ்பெண்ட் செய்தது சட்டவிரோதம் என்பதால், நான் இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close