அதிர வைக்கும் சபரிமலை விவகாரம்... பெண் வழக்கறிஞரை விரட்டிய டி.டி.வி.தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 17 Oct, 2018 11:24 am
t-t-v-dhinakaran-who-stole-the-girl-s-lawyer

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்த சிவசங்கரியை, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கியுள்ளார் தினகரன்.

 எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார் சிவசங்கரி. தினகரனின் சில வழக்குகளையும் கவனித்து வந்தார். அந்த அளவுக்கு தினகரனுடன் நெருக்கத்தில் இருந்த சிவசங்கரி ஏன் நீக்கப்பட்டார்? இதுகுறித்து அ.ம.மு.க தரப்பில் விசாரித்தோம். ‘’ஓரிரு தினங்களுக்கு முன்  தொலைக்காட்சி ஒன்றில் சபரிமலை விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தது. அதில், சபரிமலைக்கு பெண்கள் போவதற்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிராக மற்றொரு தரப்பினரும் தரப்பும் பேசினார்கள். இதில், சிவசங்கரியும் பங்கேற்று சபரிமலைக்கு பெண்கள் போனால் என்ன தப்பு என கருத்துக்களை முன் வைத்தார். 

விவாத நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே சிவசங்கரிக்கு தினகரன் வீட்டில் இருந்து போன் வந்திருக்கிறது. ஆனால், லைவ் நிகழ்ச்சியில் இருந்ததால் சிவசங்கரி போனை எடுக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு சிவசங்கரி பேசியிருக்கிறார். அவரோடு போனில் பேசியவர் பிரபு என்பவர். இவர் தினகரனுக்கு பங்காளி முறை உறவினராம். தற்போது தினகரனுக்கு உதவியாளராகவும் இருக்கிறார். ’சபரிமலை விஷயத்துல கட்சியோட நிலைப்பாடு என்ன... டிடிவி அண்ணனோட நிலைப்பாடு என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?

இதுவரைக்கு சபரிமலை பத்தி அண்னன் எந்தப் பேட்டியும், அறிக்கையும் கொடுத்ததே இல்லை. அப்படி இருக்க நீங்க எப்படி பெண்கள் சபரிமலைக்கு போகலாம்னு பேசினீங்க? அண்ணன் கேட்க சொன்னாரு...’ என்று கேட்டாராம் பிரபு. அதற்கு சிவசங்கரியோ, ‘நான் கட்சியோட கருத்தாக பேசலை. வழக்கறிஞர் என்ற முறையில்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பேசினேன்.. எல்லாத்துக்கும் உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா? சுதந்திரமா பேசக் கூடாதா? அடிமை கட்சியா நடத்துறீங்க?’ என எகிறியிருக்கிறார் சிவசங்கரி. இதையெல்லாம் தனது போனில் ரெக்கார்டு செய்து அப்படியே தினகரனுக்கு அனுப்பியிருக்கிறார் பிரபு.

அதன் பிறகுதான் சிவசங்கரியை கட்சியில் இருந்தே நீக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் தினகரன்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close