டி.டி.வி.தினகரனை தோலுரிக்கத் தயாராகும் சிவசங்கரி... அ.ம.மு.க-வில் பதற்றம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 17 Oct, 2018 11:49 am
sivasankari-get-ready-open-talk-for-t-t-v-dhinakaran-secrets

அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு வந்த அடுத்த நிமிடமே அவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.

அப்போது, ‘டி.டி.வி.தினகரன் யாரையும் வளரவிடவே மாட்டாரு.  அதற்கு மருது அழகுராஜ், நாஞ்சில் சம்பத் என உதராணங்கல் உண்டு. அவருக்காக எப்படியெல்லாம் உழைச்சிங்க.  உங்களை ஒரு நிமிஷத்துல தூக்கிப் போட்டுட்டாரு. அது மரியாதை இல்லாத இடம். நீங்க வெளியே வந்தது நல்ல விஷயம்தான். நம்ம கட்சிக்கு வந்துடுங்க. உங்களுக்கு என்ன பதவி வேணுமோ எடுத்துக்கோங்க... உடனே பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்து தினகரனை பற்றி எல்லா விஷயங்களையும்  சொல்லிடுங்க. இல்லைன்னா நீங்க ஏதோ தப்பு பண்ணிய மாதிரி ஆகிடும். நம்ம ஆளுங்க சென்னையில் இருக்காங்க. அவங்ககிட்ட சொல்லி பிரஸ்மீட்க்கு ஏற்பாடு பண்ண சொல்றேன்.’ என்று சொன்னாராம்.

அதற்கு சிவசங்கரி, ‘நீங்க பேசினது சந்தோஷம் சார். சின்னம்மா குடும்பத்துல இருந்து ஒருத்தர் இவ்வளவு அக்கறையா பேசுறதே சந்தோஷமா இருக்கு. நிச்சயமா பிரஸ் மீட் வெச்சு அவரோட முகத்திரையை கிழிப்பேன். ஒரு விஷயத்துல எந்த கருத்தும் இல்லாமல் இருக்கிறவன் முட்டாள். கருத்து சொல்லப்பயப்படுறவன் எதுக்கு கட்சி நடத்தணும்...’ என்று போனிலேயே பொங்கிவிட்டாராம். விரைவில் சிவசங்கரி பிரஸ்மீட் இருக்கிறதாம்.

அதில், தினகரனைப் பற்றி பல தகவல்கள் வெளி வரப் போகிறதாம். அதற்கான ஏற்பாடுகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறதாம்.
மறுபுறம், ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும் சிவசங்கரிக்கு தூது விடப்பட்டு இருக்கிறது. ‘நீங்க அதிமுகவுக்கு வாங்க என்று கூப்பிடல. ஆனால் அவரை சும்மா விடாதீங்க...’ என்று சொன்னாராம் அமைச்சர் ஒருவர். ஆக, எப்படி இருந்தாலும் தினகரனுக்கு எதிராக சிவசங்கரியை பேச வைக்க எடப்பாடி அணியும், திவாகரன் அணியும் கைகோர்த்துவிட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close