’முதல்வர்’ தயாநிதி மாறன்.. தி.மு.க-வை ’கைப்பற்ற’ திட்டமிட்ட கலாநிதி மாறன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 17 Oct, 2018 03:15 pm
kalanidhi-maran-who-planned-to-capture-dmk


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும்,  சன் குழும அதிபர் கலாநிதி மாறனுக்கும் இடையே தொடர்ந்திருக்கும் பனிப்போர் உச்சத்தை அடைந்திருக்கிறது. 

கருணாநிதி குடும்பத்தில் இருந்து கலைஞர் டி.வி ஆரம்பித்த போதிலிருந்தே கலாநிதி மாறனுக்கு குமைச்சல் அதிகமாகி விட்டது. சன் டி.வி-யிலிருந்த பல ஊழியர்களை சம்பள உயர்வு ஆசை காட்டி, கலைஞர் டி.வி-க்கு அழைத்து வந்தார்கள். அப்போது முதலே கலைஞர் டி.வி கலாநிதிக்கு கசப்பாகி விட்டது. ஆனாலும் சன் டி.வியை அசைக்க முடியவில்லை. அது வேறு கதை... இப்போது ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில், புதுப்பொலிவோடு கலைஞர் தொலைக்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதற்காக, சில வாரங்களுக்கு முன் கலாநிதி மாறனை அழைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். ’’கலைஞர் டிவிக்குப் புதிய இயந்திரங்கள் வாங்கவும், மேன்மைப் படுத்தவும் 100 கோடி ரூபாய் தேவை. அதை உங்களால், முதலீடு செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு மாறன், ‘என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. சிபிஐ விசாரணை வேறு இருக்கிறது. அதனால் யோசித்துவிட்டுச் சொல்கிறேன்’ என்று ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். 

சில நாட்கள் கழித்து, ‘கலைஞர் டிவியை நிர்வாகம் செய்ய சன் டிவியில் பணியாற்றும் அனுபவம் மிக்க பத்துப் பேரை அனுப்புகிறேன். அவர்கள் கலைஞர் டிவியை திறம்பட நடத்துவார்கள். என்னிடம் இருக்கக்கூடிய நவீன இயந்திரங்களையும் தருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் கலாநிதி. இதற்கு மு.க.ஸ்டாலின் முதல்கட்டமாய் சம்மதம் சொல்லி வைக்க, இத்தகவல் கலைஞர் டிவி சீனியர்களுக்குத் தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கலைஞர் டிவிக்கு சி.இ.ஓ-வாக மீண்டும் சரத்குமாரை நியமிக்க வேண்டும் என்பதே ஸ்டாலின் விருப்பம். ஆனால், இதனை அறிந்துகொண்ட கலாநிதி மாறன், ‘சரத் வேண்டாம். நாங்கள் நியமிக்கும் ஆட்களே போதும்., சரத் ஏற்கனவே சன் டிவியில் நிதியைச் சரியாகக் கையாளவில்லை. கலைஞர் டிவியிலும் கலைஞர் தாத்தாவுக்கு  தெரியாமல் நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார். அதனால், சரத் வேண்டவே வேண்டாம்’ என்று மறுத்திருக்கிறார். ஆனால் சரத் மீது ஸ்டாலினுக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததால் இந்த விஷயம் பற்றி மேலும் சிலரிடமும் விசாரித்திருக்கிறார்.

இதற்கிடையே தன்னைப் பற்றி சிலரிடம் ஸ்டாலின் சந்தேகப்பட்டு விசாரிப்பதை அறிந்த சரத்குமார் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காக சபரீசன் மூலம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். ‘என் மேல அவங்க முறைகேடு புகார் உங்களிடம் சொல்லியிருக்கிறதா கேள்விப்பட்டேன். வேண்டுமானால்,  அப்போது சன் டிவியில் இருந்த ஆடிட்டர்தான் இப்போது கலைஞர் டிவிக்கும் இருக்கிறார். அவரிடம்  கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் சரத். ஆடிட்டரும், சரத் பற்றி நல்ல விதமாகவே சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுடனான சந்திப்பில் இன்னொரு விஷயத்தையும் அவரிடம் கொட்டியிருக்கிறார் சரத்.

‘கலைஞர் டிவியோட நிர்வாகத்தை நீங்க சன் டிவிக்கிட்ட கொடுக்குறதுங்குறது உங்க தலைவர் பதவியையே அவங்ககிட்ட கொடுக்கறது மாதிரிதான். பல வருஷம் முன்னாடி என்கிட்ட கலாநிதி மாறன் சாதாரணமா பேசிக்கிட்டிருந்தபோது, ‘எப்படியாவது நம்ம தயாநிதியை திமுகவுக்குத் தலைவராக்கி சிஎம் ஆக்கணும்குறதுதான் என்னோட லட்சியம். திமுக மாவட்டச் செயலாளர் ஒவ்வொருத்தரும் நம்மளோட கேபிள் பிசினஸால மாசம் இருபது லட்சத்துக்கு மேல சம்பாதிச்சுக்கிட்டிருக்காங்க. இன்னும் சில விஷயங்களை செஞ்சுகொடுத்தா அவங்க நம்ம பக்கம் வந்திருவாங்கன்னு கலாநிதியே என்கிட்ட சொன்னாரு. அப்படிப்பட்வரையா நம்பி கலைஞர் டிவி நிர்வாகத்தைக் கொடுக்கப் போறீங்க?’’ என்று சரத் நேரடியாகவே  சொல்ல, அதிர்ந்து விட்டாராம் ஸ்டாலின். 

அடுத்து என்ன நடக்கப்போகிறதோ...?

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close