அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 17 Oct, 2018 05:26 pm
t-t-v-dhinakaran-to-stop-sasikala

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து பின்னர், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. டெல்லி உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.கவில் இருக்கும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது எனவும் கட்சித் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும் எனவும் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், `வழக்கு தொடர்பாக மனுதாரர் உட்பட அனைவரும் தங்களது கருத்துகளைத் தலைமை தேர்தல் ஆணையத்தில் எழுத்துபூர்வ பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்துப் பிரமாண பத்திரங்களையும் பரிசீலனை செய்து அடுத்த 4 வாரத்தில் வழக்கின் இறுதி உத்தரவை தலைமைத் தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தனர்.

இதையடுத்து, `அ.தி.மு.க-வின் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாகத் தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட வேண்டும்' எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா. 

இந்நிலையில், `பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா போட்டியிட வேண்டும் என்றால், அ.ம.மு.க இடைக்கால ஏற்பாடு' எனப் பதிவு செய்தால்தான் அவரால் போட்டியிட முடியும். ஆனால், இதில் தினகரன் முரண்பாடாக செயல்பட்டு வருகிறார். `அ.ம.மு.க என்பது இடைக்கால ஏற்பாடு அல்ல. அண்ணா தி.மு.க எங்களோடு இணைய வேண்டும்' என்கிறார். இதனை அ.தி.மு.கவுக்கு எதிரான நிலைப்பாடாகத்தான் பார்க்க முடிகிறது. இதன்மூலம் சசிகலாவைப் போட்டியிட வைக்காமல் முடக்கும் வேலைகள் நடப்பதாகவே தோன்றுகிறது" என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close