பெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்

  Newstm Desk   | Last Modified : 17 Oct, 2018 10:24 pm
kamal-unveils-app-for-women-safety

#MeToo ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை விவகாரங்கள் அதிகம் வெளியே தெரிய துவங்கியுள்ள நிலையில், பெண்கள் பாதுகாப்புக்கான புதிய செயலியை நடிகர் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தியுள்ளார். 

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு செயலி ஒன்றின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், ‘ரவுத்திரம்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறப்பு செயலியை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், கமல் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், விஜய் டிவி புகழ் கோபிநாத், கவிஞர் சினேகன், ரூபா ஐபிஎஸ், ரித்விகா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close