தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழிசை!

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 11:34 am
tamilisai-soundararajan-says-thanks-to-tn-govt

தமிழகத்தில் கேன் வாட்டர் உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வீடுகளுக்கு நேரடியாக, தரமான குடிநீரை அரசே விநியோகிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக நேற்று போராட்டம் நடத்திய நிலையில் கேன் வாட்டர் விநியோகமும் பாதிப்படைந்தது. இதையடுத்து தமிழக அரசு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தை  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 

தொடர்ந்து, தண்ணீர் கேன் உற்பத்தி நிறுத்தத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் நல சங்கம் தெரிவித்ததுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது.

இதற்கு பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'டேங்கர் லாரி உரிமையாளர்கள் கேன் தண்ணீர் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் முடிவிற்கு கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி @CMOTamilNadu தரமான குடிநீரை வீடுகளில் அரசே வினியோகிக்க முழுமுயற்சி எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதனை உணர்ந்து உடன் செயலாற்ற வேண்டிக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

மேலும், "எங்களுக்கு கேன் தண்ணீர் லாரி தண்ணீர் வேண்டாம்.எங்களுக்கு கார்ப்பரேஷன் /உள்ளாட்சி அமைப்புகளின் அரசின் குழாய் தண்ணீரே போதும் நாங்கள் நம்பிக்குடிக்கலாம் அவ்வளவு சுத்தமாக குழாயில் வரும் மக்கள் என்று சொல்லும் காலம் வரவேண்டும் .அது அரசின் கடமை அல்லவா?" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close