தி.மு.க கூட்டணியில் பா.ம.க... விடுதலைச் சிறுத்தைகளுக்கு கல்தா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 18 Oct, 2018 12:12 pm
dmk-alliance-in-the-pmk-coalition

பரபரப்பான சூழலில் கூடிய தி.மு.க.,வின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் என்ன பேசியிருப்பார்கள் என அக்கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருந்தனர். 

தைலாபுரத்தில் இருந்த டாக்டர் ராமதாஸும், சென்னையில் இருந்த அன்புமணியும் திமுகவின் முடிவு குறித்து அறிய ஆர்வத்தோடு காத்திருந்தனராம். அப்படி செயல்குழுவில் பேசப்பட்ட தகவல்கள் குறித்து உடன்பிறப்புகள் சிலரிடம் விசாரித்தோம். ‘‘இப்போதைக்கு ஒரு மெகா கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  அதற்கு பாமகவையும் கூட்டணிக்கு இழுத்து வர வேண்டும் என ஸ்டாலிண்டம் கோரிக்கை வைத்தனர். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் சமீபகாலமாக நமக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.  ஆகையால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு பதிலாக பாமகவை கூட்டணிக்குக் கொண்டுவந்தால் வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை வெல்லலாம்’ என சிலர் கருத்துக் கூறினார்கள்.

ஆனால்,  வடமாவட்ட திமுக பிரமுகர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, ம.ம.க, த.ம.க என அனைத்துக் கட்சியினரும் ஸ்டாலின் தான் முதல்வர் என பகிரங்கமா ஏத்துக்கிட்டாங்க. ஆனால், பா.ம.க இப்போதும் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் எனச் சொல்லிக்கிட்டிருக்காங்க. அவங்களை எப்படி ஏத்துக்கறது என்று ஸ்டாலினிடம் சிலர் வாதாடினார்கள்.

பாமகவினரை அடுத்து இந்தக் கூட்டத்தை ஏகத்துக்கும் எதிர்பார்த்துக் காத்திருந்தது காங்கிரஸ் கட்சிதான். ஏனெனில், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்றுதான் ஸ்டாலின் சொல்லி வந்தாரே தவிர, காங்கிரஸ் ஆட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. ஒருவேளை 2014 போல ஆகிவிடுமோ என்று நினைத்த காங்கிரஸாரும் திமுகவின் உயர் நிலைக் கூட்டம் முடிந்ததும் விசாரித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி, ‘நம்மை ஏற்று நம்மோடு தொடர்ந்து பயணித்து வரும் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தை, சிபிஎம், சிபிஐ, மமக ஆகிய கட்சிகள் போதும்’ என்று ஸ்டாலின் சொல்லிவிட்டார்’’ என்கிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close