விஜய் தளபதியா..? கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 18 Oct, 2018 12:21 pm
vijay-is-thalapathy-stalin-s-family-roasting-the-kalanidhi-maran

சர்கார் இசைவெளியீட்டு விழாவுக்குப் பிறகு கலாநிதியைத் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதை ஏற்று கலாநிதி அங்கே சென்றபோது வீட்டில் ஸ்டாலின், உதயநிதி, மருமகன் சபரீசன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

கலாநிதி மாறன் வந்ததும் உதயநிதி, ‘தளபதி’ டாபிக்கை ஆரம்பித்திருக்கிறார். ‘’சர்கார் விழா பார்த்தேன். தளபதின்னா அது அப்பாதானே...? நீங்க புதுசா இப்ப தளபதின்னு விஜய்யை ப்ரமோட் பண்றீங்களே? அப்பாவுக்கு எதிராகவா?’ என்று கேட்டிருக்கிறார். உடனடியாக மறுத்த கலாநிதி, ‘அப்டியெல்லாம் இல்ல... அந்த விழாவில் ஃபுல்லா ஏதோ ஒரு ஞாபகத்துலயே இருந்துட்டேன். அங்க என்ன நடந்ததுன்னே நான் கவனிக்கலை’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உதயநிதி விடவில்லை. ’கலைக்கு நிதியை வாரி வாரி கொடுக்கும் வள்ளல்னு விஜய் உங்களைச் சொன்னப்ப சிரிச்சீங்களே?’ என்று கேட்க கலாநிதி மாறன் மீண்டும் அதையே சொல்லியிருக்கிறார்.

அப்போது சபரீசன் ஒரு மெயிலின் ப்ரிண்ட் அவுட் பேப்பரை எடுத்து கலாநிதி மாறனிடம் காட்டினார். ‘அந்த விழாவுல விஜய் என்ன பேசணும்னு நாலு நாள் முன்னாடியே ஒரு டிராஃப்ட் எடுத்து உங்களுக்கு அனுப்பிருக்காங்க. நீங்க ஓகே சொன்னபிறகுதான் விஜய்யே பேசியிருக்காரு’ என்று சொல்ல கலாநிதி மாறனால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.

அதன் பிறகு ஸ்டாலின், ‘அப்பா திருவாரூர்லேர்ந்து வந்து கஷ்டப்பட்டாரு, வளர்ந்தாரு. என்னையும் ஆளாக்கினாரு. ஒரே குடும்பம்னு உங்களையும் ஆளாக்கினாரு. அப்பா உங்களை நிறைய அனுசரிச்சாரு. ஆனா, நான் அப்படி இல்லைங்குறத புரிஞ்சுக்கங்க. உங்களை நம்பி நான் திமுக தலைவராகல. தயாநிதி மாறனுக்கு சீட் கொடுக்கறதும்கூட இப்ப என் கையில இருக்கு. இனிமே ஜாக்கிரதையா நடந்துக்கங்க’ என்று கலாநிதி மாறனிடம் மிகக் கோபமாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close