ராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா!

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 04:57 pm
pon-radhakrishnan-talks-about-rahul-gandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பபட்டி பகுதியில் 'அனைவருக்கும் நல வாழ்வு மையம்' என்ற புதிய கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் திறக்கப்பட்டது. 

இதில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீப காலமாக தொடர்ந்து காவி உடை தரித்தபடி, கோவில்களுக்கு சென்று வருகிறார். விரைவில் அவர் சாமியாரானால் நாட்டுக்கு நல்லது என குறிப்பிட்டார். மேலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இது நேரமல்ல. தேர்தல் நெருங்கும்போது அதுகுறித்து பேசுவோம் எனவும், லோக்சபா துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை எனது சகோதரர் போன்றவர். அவர் கூறும் கருத்து எந்த அர்த்தத்திலானது என்பதை தெரிந்து கொண்டு அதுபற்றி கருத்து கூறுகிறேன்" எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close