ரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 18 Oct, 2018 05:25 pm
the-earthquake-in-the-rajini-makkal-mandram

ரஜினி மக்கள் மன்றத்தில் ரசிகர்களை வைத்து மட்டுமே கட்சியை நடத்த முடியுமா? பணம் படைத்தவர்களும் இங்கு தேவைப்படுகிறார்கள் என ரஜினி மக்கள் மன்றத்தின்  அமைப்புச் செயலாளர் டாக்டர் இளவரசன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

’மக்கள் மன்றத்தில் பொறுப்பு கொடுப்பதை மூன்று நிலைகளில் பிரித்துள்ளோம். நன்றாக செயல்படும் மாவட்டம் ஒன்று. சுமாரன முறையில் செயல்படும் மாவட்டம் மற்றொன்று. அடுத்தது செயல்பாடு இருந்தாலும், ஓரளவுக்கு பண வசதி தேவைப்படும் மாவட்டம் எனப் பிரித்துள்ளோம். தேவைப்படும் இடங்களில் மூன்றாவது வகையான பண வசதி படைத்தோருக்கான வாய்ப்புகளை கொடுக்கிறோம். பல மாவட்டங்களில் முக்கியப்பொறுப்பில் வசதியற்றவர்கள்தான் உள்ளனர். கோடீஸ்வரர்கள் பலர் பதவிக்காக காத்திருக்கிறார்கள். ஆனாலும் சீனியாரிட்டி படியே நியமிக்கிறோம்.

 

30 ஆண்டுகளுக்கும் மேலாக மன்ரத்திலொ இருக்கும் ரசிகர்களை நீக்குவது நியாயமா எனக் கேட்கிறார்கள். வெறும் ரசிகர்களை மட்டும் வைத்து ஆட்சியைப் பிடித்து விட முடியுமா? மக்கள் எல்லாம் இதில் இணைய வேண்டும் என்பதால்தான் தலைவர் மக்கள் மன்றமாக மாற்றினார். தலைவர் படம் வரும்போது பேனர், கட் அவுட் வைப்பார்கள். டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். மற்றபடி இந்த 30 ஆண்டுகலில் தலைவரால் நான் நடுத்தெருவுக்கு வந்தேன் என்று யாராவது சொல்ல முடியுமா? ரசிகர்களை மக்கள் மன்றத்தில் சேர்க்காமல் விட்டுவிடவில்லையே...  கடந்த ஏழெட்டு  மாதங்களாக எந்தப்பணியும் செய்யாமல், மன்றக் கட்டுப்பாட்டை மீறியவர்களையே நீக்கியுள்ளோம். 
தி.மு.க- அ.தி.மு.க கட்சியினர் எல்லாம் பூத் கமிட்டியில் பல ஆண்டு அனுபவம் உள்ளவர்கள். நம்மகிட்ட என்ன இருக்கு ஒண்ணுமே இல்லை. ஒரு பூத் கமிட்டிக்கு 30 ஆண்டுகள் மன்றத்தில் இருந்தது மட்டுமே அரசியலுக்கான தகுதியாக பார்க்க முடியாது. 30 ஆண்டுகள் இருப்பவர்களால் ஒரு மாவட்டத்தில் 6 தொகுதிகளை ஜெயிக்க முடியுமா? அதனால்தான் மற்ற கட்சிகளில் உள்ள பெரிய ஜாம்பவான்களை எதிர்கொள்ள  வசதி படைத்தவர்களை நியமிப்பது கட்டாயமாகிறது. உண்மை உழைப்பாளி இருக்கிறான், போலிகள்தான் வெளியேற்றப்படுகிறார்கள்’’ என்கிறார் டாக்டர் இளவரசன்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close