ஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Oct, 2018 11:53 am
bjp-to-unite-t-t-v-dhinakaran-edappadi-palanisamy

வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது பா.ஜ.க. அதற்காக பல வியூகங்களை வகுத்து வருகிறது. 

உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் சித்தப்பாவை தனிக் கட்சியும் தொடங்க வைத்துவிட்டார்கள். மாயாவதியிடம் இருந்து காலி செய்ய வைத்த அந்த வீட்டை இப்போது அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். தொகுதிக்கு 4 ஆயிரம் ஓட்டைப் பிரித்தாலே போதும். அதுவே நமக்கு வெற்றி என்பது பா.ஜ.க கணக்கு.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வந்த சர்வே படி, ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் வாக்கு வங்கி 27 சதவிகிதம் இருந்தது. அதில் 8 சதவிகிதம் இப்போது தினகரன் பிரித்திருக்கிறார். தென் மாவட்டங்களில் 12 சதவிகிதம் தினகரன் பிரிப்பதாகவும் டெல்லிக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இதுதான் அதிமுக நிலவரம். தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி என்பது நடக்காத விஷயமாகிவிட்டது.
தி.மு.க காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அப்படியானால் பா.ஜ.கவுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் அ.தி.மு.க. பிரிந்து கிடக்கும் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதாலோ அல்லது தினகரனுடன் கூட்டணி சேர்வதாலோ நமக்கு எந்த லாபமும் இல்லை. ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது. பிரிஞ்சு கிடக்கும் எடப்பாடியையும், தினகரனையும் ஒன்று சேர்க்கணும். அப்படிச் சேர்த்தால்தான் அதிமுகவின் வாக்கு வங்கியை ஒருநிலைப்படுத்த முடியும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதன் பிறகுதான் டெல்லியில் இருந்து எடப்பாடி, பன்னீர், தினகரன் மூவரிடமும் தனித்தனியாகப் பேசியிருக்கிறார்கள். தினகரனிடம் இது சம்பந்தமாக பேசியபோது, ‘ஒன்று சேர நான் ரெடியாக இருக்கேன். ஆனால், அதிமுக என் தலைமையில்தான் இருக்க வேண்டும். அதுக்கு சம்மதமா எனக் கேட்டுச் சொல்லுங்க...’ என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். எடப்பாடியிடம் இந்தத் தகவலையும் டெல்லியிலிருந்தே சொல்லியிருக்கிறார்கள். அவரோ அதற்குப் பதில் எதுவுமே சொல்லாமல் மழுப்பலாகவே பேசினாராம். அதே நேரத்தில் எடப்பாடி தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் இது தொடர்பாக ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்.

‘எப்படியும் அவங்க சொல்றதை நாம கேட்கலைன்னா நம்ம மேல வழக்கு வரும். நெருக்கடிகளும் வரும். ஒருவேளை நாம எலெக்‌ஷன்ல நின்னு மத்தியில் காங்கிரஸ் வந்துட்டா நம்ம மேல அவங்களும் வழக்குப் போடுவாங்க... பழைய விஷயங்களை தோண்டுவாங்க. அப்போ நாம தினகரனோடு சேரும் சூழ்நிலை வரலாம். அதே நேரத்தில் தினகரன் தலைமையையும் ஏற்க முடியாது...’ என்று சொன்னாராம் எடப்பாடி.

அதற்கு அவருக்கு நெருக்கமானவர்களோ, ‘ நாம சேர்ந்தால் நமக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க என்பதையும் பேசிக்கணும். அதே நேரம் தலைமைப் பொறுப்பைத் தினகரனுக்குக் கொடுக்கவும் சம்மதிக்கக் கூடாது. அவருக்கு அதிகபட்சமாக அமைச்சர் பதவி வரை வேண்டுமானால் கொடுக்கலாம். அதைத் தவிர கட்சியை மொத்தமாக அவருகிட்ட அடகு வைக்க சம்மதிக்காதீங்க...’ என்று சொன்னார்களாம். குழப்பத்தில்தான் இருக்கிறார் எடப்பாடி!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close