பிரேமலதா விஜயகாந்துக்கு தே.மு.தி.க. பொருளாளர் பதவி

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 11:42 am
dmdk-treasurer-post-for-premalatha-vijayakanth

தே.மு.தி.க.  கட்சியின் பொருளாளராக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது.

விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்தது முதல், அக்கட்சியின் அரசியல் முடிவுகளை தீர்மானிப்பதில் பிரதான இடத்தில் இருந்து வருபவர் பிரேமலதா விஜயகாந்த். தே.மு.தி.க.வின் கட்சிப் பதவிகள், கூட்டணி கணக்குகள், தேர்தல் பிரசாரங்கள் என அனைத்திலும் பிரதான பங்கு வகிப்பவராக இருந்தார் அவர். எனினும், கட்சியில் இதற்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் எந்தவித பதவியிலும் இல்லை.

இந்தச் சூழலில் தே.மு.தி.க. உயர்நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பிரேமலதா விஜயகாந்தை கட்சியின் பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்வது குறித்து ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. கட்சியின் அவைத் தலைவராக டாக்டர் வி.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close