ரஜினி மக்கள் மன்றத்தில் ‘ரெய்டு’ தலைமைச்செயலாளர்..!?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Oct, 2018 01:50 pm
rajini-makkal-mandram-join-raide-chief-secretary

ரெய்டு சர்ச்சையில் சிக்கியவரும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளருமான ராமமோகன் ராவ், ரஜினி மக்கள் மன்றத்தில் தன்னை இணைத்துக்கொள்ள ரஜினிக்கு தூது விட்டு வருகிறார்.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக இருந்த காலகட்டத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவைக் குறிவைத்துக் களமிறங்கியது வருமான வரித்துறை. அவர்கள் நேராக தலைமைச் செயலகத்தில் இருந்த ராமமோகன ராவின் அலுவலகத்திலேயே சோதனையை நடத்தினர். இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ராமமோகன ராவ், `` ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் சோதனை நடந்திருக்குமா?' எனக் கொந்தளித்தார்.

இந்த விவகாரத்துக்குப் பிறகு எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் ஓய்வு பெற்றுவிட்டார். ராமமோகன ராவின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக பேசுவார்.

இந்த நிலையில்,  அரசியல் கட்சி தொடங்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வரும் ரஜினிகாந்தை ராமமோகன் ராவ் ஒரு முறை ரகசியமாக சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது ரஜினி மக்கள் மன்றத்தில் இணையவும் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அப்போது ரஜினி எதுவும் பிடிகொடுத்து பேசவில்லையாம். இதனால், மீண்டும் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துப்பேச முயன்று வருகிறார். ஆனால், ரஜினி தவிர்த்து வருகிறாராம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close