சபரிமலை செல்லும் பெண்களை தாக்குவதை பா.ஜ.க  நிறுத்த வேண்டும் : திருநாவுக்கரசர்

  சுஜாதா   | Last Modified : 19 Oct, 2018 04:01 pm
thirunavukkarasar-talks-about-sabarimala

சபரிமலை கோவிலுக்கு என்று ஒரு மரபு உண்டு. இதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் நிறுத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
"முதலமைச்சர் பழனிசாமி தனக்கு வேண்டியவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் ரூ. 4000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த கோர்ட்டு போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்ததை ஏற்க மறுத்து விட்டது. மேலும் ஊழல் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றியது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தவுடன் முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

முதல்வரை எவ்வாறு சி.பி.ஐ. விசாரணை செய்ய முடியும்? எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பதவி விலக வேண்டும். இதற்கு அமைச்சர்கள் அந்த கட்சி அப்படி செய்தது? இப்படி செய்தது? என்று அடுத்த கட்சியை குறை கூறக்கூடாது.

சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால் சபரிமலை கோவிலுக்கு ஒரு மரபு உள்ளது. அதுவும் காக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சென்று தேவசம் போர்டு தனது உரிமையை பெற வேண்டும்.

இதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் நிறுத்த வேண்டும்.

கமலை பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சப்பாணி என்று கூறியது தவறு. அரசியலில் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசு தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close