ஆண்டாளுக்கு ஆதரவு... சின்மயிக்கு எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் முடிவால் வைரமுத்து அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Oct, 2018 11:59 am
vairamuthu-shocked-by-m-k-stalin-s-decision

ஆண்டாள் சர்ச்சையின்போது, தி.மு.க செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், வைரமுத்துவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இப்போது சின்மயி விவகாரத்தில் சிக்கி வதைபட்டு வருகிறார் வைரமுத்து.

மீ டூ இயக்கத்தில் தன்னை அழைத்தார் வைரமுத்து என பாடகி சின்மயி கொளுத்திப் போட அது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பல தரப்பிலிருந்தும் வைரமுத்துவுக்கு எதிராகக் கண்டனக் குரல்களும் வந்தபடியேதான் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தனக்கு ஆதரவாக திமுகவிலிருந்து, அதுவும் தலைவர் ஸ்டாலினிடமிருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார் வைரமுத்து. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் கழிந்தது மட்டுமே மிச்சமாகி இருக்கிறது கவிப்பேரசுவிற்கு. இந்நிலையில், கனிமொழி மீ டூ இயக்கத்தை ஆதரித்து ட்வீட் பதிவு செய்தார். அதையடுத்து,  தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி, ஸ்டாலினிடம் ஆதரவாக கருத்து வெளியிடச் சொல்லி கேட்டிருக்கிறார். ‘தலைவர் இருந்தால் என்னை இப்படி விட்டிருப்பாரா?’ என்று கேட்டும் வைரமுத்து, அவர்களிடம் வருத்தப்பட்டாராம்.

இந்த விஷயம் ஸ்டாலின் கவனத்துக்குப் போயிருக்கிறது. ‘ஆண்டாள் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக அறிக்கை விட்டோம்னா அது பொதுவான விஷயம். இது அவரோட பர்சனல் விஷயம். இதுல போய் நாம எதுக்கு மூக்கை நுழைக்கணும்? சின்மயி விவகாரத்தில் அவரோட பேரு ஊர் பூராவும் கெட்டுப் போயிருக்கு. இந்த நேரத்துல அவருக்கு நாம எதுக்கு சப்போர்ட் பண்ணணும்? இதுநாள் வரைக்கும் கட்சிப் பேரை வெச்சுக்கிட்டு அவருதான் பலனடைஞ்சிட்டு இருந்திருக்காரு. அவரால கட்சிக்கு எந்த லாபமும் இல்லை. அதனால இதில் நாம அமைதியாக இருப்பதுதான் நல்லது...’ என்று சொல்லிவிட்டாராம்.

திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘வைரமுத்துவுக்கான முக்கியத்துவம் திமுகவில் இப்போது இல்லை. கவிஞர் ஒருவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அப்போது வைரமுத்துவை அழைப்பதாக இருந்தால், ’நான் வரவே இல்லை. நீங்க அவரை வெச்சே விழாவை நடத்திக்கோங்க!’ என கலைஞர் குடும்பத்திலிருந்தே அப்போது ஒரு குரல் வந்தது. அதனால் அந்த விழாவுக்கு வைரமுத்துவை அழைக்கவில்லை. இதேபோல் இன்னொரு புத்தக வெளியீட்டு விழாவுக்கும் வைரமுத்துவை அழைக்க ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டாலினிடம் பேசி சமாதானப்படுத்த அவர்களுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது. வைரமுத்துவைக் கட்சிக்கான அடையாளமாக இனி எங்கேயும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.” என்று சொல்கிறார்கள்.

இந்த விவரங்களை எல்லாம் ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் இன்னும் வைரமுத்துவிடம் சொல்லவில்லையாம். ஸ்டாலினிடமிருந்து அறிக்கை வரும் என்ற எதிர்பார்ப்பில்தான் காத்துக் கொண்டிருக்கிறார் கவிப்பேரசு வைரமுத்து.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close