டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Oct, 2018 06:19 pm
three-snakes-surrounding-t-t-v-dhinakaran-supporters-in-panic

டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க கட்சியில் நடக்கும் குழப்பங்களுக்கு அவரது உதவியாளர் ஜனா என்கிற ஜனார்த்தனனும், மனைவி அனுராதாவும்தான்  முக்கிய காரணமாக இருப்பதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் சிவசங்கரி அதிரடியாக குற்றம்சாட்டி உள்ளார். 

ஏற்கெனவே இது தொடர்பாக  கடந்த ஜூன் மாதம்  தினகரனின் காலைச்சுற்றிய பாம்பு... அர்திர்ச்சியில் ஆதரவாளர்கள்! என்கிற தலைப்பில் எழுதி இருந்தோம்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அமமுக-வில் செய்தி தொடர்பாளராகவும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிப் பொறுப்பாளராகவும் இருந்த வழக்கறிஞர் சிவசங்கரியை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார் டி.டி.வி.தினகரன். 

 இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் கட்சியில் நடக்கும் அத்தனை தவறுகளையும் மீடியா முன் தோலுரிக்கக் காத்திருக்கிறார் சிவசங்கரி என்பதை டி.டி.வி.தினகரனை தோலுரிக்கத் தயாராகும் சிவசங்கரி... அ.ம.மு.க-வில் பதற்றம்! என்கிற தலைப்பில் எழுதி இருந்தோம். அதை மெய்ப்பிக்கும் வகையில், தினகரன் மீதான குற்றச்சாட்டுகளை வெளியிடத் தொடங்கி இருக்கிறார் சிவசங்கரி.‘’சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா? கூடாதா? என்கிற விவாதத்தை மக்கள் தொலைக்காட்சி நடத்தியது.  இப்பிரச்சனையில் எந்த நிலைப்பாட்டையும் தினகரன் எடுக்காததால் கட்சி சார்பாக நான் கலந்துகொள்ளாமல் வழக்கறிஞராக கலந்துகொண்டேன்.

சில விஷயங்களை பெரிய குற்றமாக கருதி  தினகரனின் உதவியாளர்கள் ஜனாவும், பிரபுவும் என்னைக் குற்றவாளியாக்கி விட்டார்கள். அடுத்து என்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சியிலிருந்து நீக்கி விட்டார் தினகரன். கட்சியை தினகரன் ஆரம்பித்த போது பதவிக்காக ஒரு பைசா கூட நான் தரவில்லை. என் உழைப்பைப் பார்த்துதான் பதவிகளை எனக்கு தினகரன் தந்தார். இது பலருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, தினகரனின் மனைவி அனுராதா, உதவியாளர்கள் ஜனா, பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. கட்சியிலுள்ள நியமனங்களாக இருந்தாலும் நீக்கமாக இருந்தாலும் அனுராதாதான் முடிவு செய்வார்.

அவருக்குத் தெரியாமல் அவரது அறிவுறுத்தல் இல்லாமல் எதுவும் நடக்கக்கூடாது. அப்படி ஒரு சட்டம் கட்சியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு மட்டும் யாரிடமும் ஆலோசிக்காமல் தினகரனே பதவி கொடுத்துவிட்டார். அதனால் ஆரம்பத்திலிருந்தே என்னை அனுராதாவுக்குப் பிடிக்காமல் போனது. அனுராதாவுக்கு துணையாக ஜனாவும் பிரபுவும் இருந்தனர். பதவி கிடைத்தப் பிறகு அனுராதாவை நான் சந்திக்கவில்லைங்கிறதுதான் அவர்களுக்கு கோபம். கட்சிக்கும் அனுராதாவுக்கும் சம்மந்தமில்லைங்கிற போது அவரை ஏன் நான் பார்க்க வேண்டும்?

 

தினகரனுக்கும், தொண்டர்களுக்கும் கட்சியில் அதிக இடைவெளியிருக்கிறது. அவரை யார் சந்திக்க வேண்டுமென்பதை அனுராதாதான் முடிவு செய்கிறார். தினகரன் அங்கு டம்மி. முதல் வலை ஜனா, இரண்டாவது வலை பிரபு, மூன்றாவது வலை அனுராதா. இந்த மூன்று வலைகளையும் தாண்டித்தான் தினகரனை சந்திக்க முடியும். கட்சி வேறு ; குடும்பம் வேறு என அவர் பிரித்துப் பார்க்காமல் ஒன்றாகப் பார்க்கிறார் தினகரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 99 சதவீத தொண்டர்கள் இதனை ஏற்க மறுத்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். மூவர் அணியின் டார்ச்சரால் தினகரனை விட்டு வெளியேற பலரும் சூழல்களுக்காக காத்திருக்கிறார்கள்’ என சராமரியாக தினகரன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் சிவசங்கரி! 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close