தைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Oct, 2018 12:25 pm
thailaalapuram-garden-manganiyi-s-attracted-edappadi

வருகிற அக்டோபர் 28-ம் தேதி வன்னியர் சங்கங்களின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டு விழா நடத்துவது பா.ம.க நிர்வாகிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலைப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது, அவருக்கு மணிமண்டபம் அமைப்பது, வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைத்தது உள்ளிட்ட முதல்வரின் நடவடிக்கைகளுக்காக இந்தப் பாராட்டு விழா நடைபெறுகிறது.
முதல்வருக்கான இந்தப் பாராட்டு விழாவை பல்வேறு வன்னியர் அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. விழா எடுப்பதாக சொன்னபோது தயக்கம் காட்டியுள்ளார்  எடப்பாடியார். ’விழா வேண்டாம் உங்களது வாக்குகளை மொத்தமாக அ.தி.மு.க-வுக்கு அளித்தால் அதுவே போதும். அதனை உறுதிப்படுத்துங்கள்’ என எடப்பாடி கோரிக்கை வைத்துள்ளார்.

அப்போது வன்னிய சங்கங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். அதன் பிறகே எடப்பாடி பாராட்டு விழாவிற்கு சம்மதித்திருக்கிறார். இந்த விழாவை ஒருங்கிணைப்பவர் படையாச்சியார் பேரவையின் தலைவரான திருவாரூர் எம்.பி.பெரோஸ் காந்தி. தனது ஆரம்பக் காலத்தில் பாமகவில் இருந்து பல ஆண்டுகள் அங்கே பணியாற்றிய பெரோஸ் காந்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் கடந்த வருடம் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். 
இது குறித்து வன்னியர் சங்கக் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர், ‘’கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே எங்கள் சமுதாயத்துக்காகச் சில கோரிக்கைகளை முன்வைத்து வந்தோம். அப்போதிலிருந்தே முன்வைத்த கோரிக்கைகளை இப்போதைய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. வன்னிய சமுதாயத்துக்குத் தீமை செய்தால் கண்டனம் செய்வதும், நன்மை செய்தால் தட்டிக்கொடுத்துப் பாராட்டுவதும் எங்கள் கடமை.

அந்த வகையில் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான படையாச்சியார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது, வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகத் தமிழக அரசைப் பாராட்டுகிறோம்’’ என்கின்றனர். வன்னியர் சங்கங்கள் ஒன்றிணைந்து எடப்பாடிக்கு விழா நடத்துவதால் பா.ம.க நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். இதனால், வரும் தேர்தலில் வாக்கு வங்கி சராமரியாக சரியும் என அறிந்து கொண்டுள்ள ராமதாஸ் இப்போது காடுவெட்டி குருவை முன்னிலைப்படுத்தி வன்னிய இளைஞர்களை வளைக்கத் திட்டமிட்டு வருகிறார்.

இதுவரை வன்னியர் வாக்குகளை மட்டுமே வைத்து அரசியல் நடத்தி வந்த பா.ம.கவுக்கு இது பெரும் பாதிப்பை உருவாக்கும் என்கிறார்கள்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close