கூவத்தூர் பார்ட்- 2? குற்றாலத்திற்கு படையெடுக்கும் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள்!

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2018 03:51 pm
ttv-dinakaran-mlas-going-to-kutralam

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக அரசியலில் மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளியாகலாம் என்று உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. (வழக்கின் முழு விபரம்..)

இந்த சூழ்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. தீர்ப்பு வருவதையொட்டி தான் தினகரன் இவ்வாறு கூறியுள்ளார் என்று பேசப்பட்ட நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர், "தாமிரபரணி புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. எனவே புஷ்கர விழாவில் கலந்துகொண்டு, ஆற்றில் நீராடி, எங்களது வேண்டுதல் நிறைவேற செல்கிறோம். குற்றாலம் சென்றுவிட்டு நாளை புஷ்கர விழாவில் கலந்துகொண்டு நாளை மறுநாள் சென்னை திரும்புவோம். இதில் எந்தவிதமான அரசியல் காரணங்களும் இல்லை. நாங்கள் செல்வது தினகரனுக்கு தெரியாது. இது எங்களது தனிப்பட்ட முடிவு. இதற்கும், தலைமைக்கும் சம்மந்தமில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் கருணாஸ், அருண் பாண்டியன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 4 பேர் வருகின்றனர். மொத்தம் 22 பேர் குற்றாலம் செல்ல இருக்கிறோம்" என விளக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நேற்று தினகரன் தலைமையில் அவ்ரது ஆதரவு எம்.எல்.ஏக்கள்  கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அனைவரும் பெங்களூரு சென்று சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துள்ளனர். 

தங்கத்தமிழ்செல்வன் விளக்கம் அளித்தாலும், ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்கள் செல்வது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close