கூவாத்தூராகிறதா குற்றாலம்? தினகரன் ஆதவாளர்களுக்கு எடப்பாடி கிடுக்கிப்பிடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Oct, 2018 06:44 pm
kuvathur-part-2-dinakaran-favors-the-supporters

பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அம்மா மக்கள் முன்னற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில்  ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் 18 பேரை தவிர, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரும் பங்கேற்றனர். வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை, டி.டி.வி.தினகரன் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருப்பதால் அவர்களை குற்றாலத்தில் தினகரன் ஒன்று சேர்த்து தங்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனை தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வனும் உறுதிபடுத்தி பேட்டியளித்தார். குற்றாலம் மீண்டும் கூவாத்தூர் பார்ட்-2 ஆகப்போகிறதா? என பேச்சுகள் எழுந்து வருகின்றன.

இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் ஒரு சிலரிடம் பேசினோம். அவர்கள் தினகரன் தங்களிடம் ஆலோசித்ததாக கூறப்படும் தகவல்கள் இது. ‘’ வரும் 24 ம் தேதி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரலாம். எனக்கு தெரிந்து உங்க பதவிக்கு எதுவும் ஆபத்து வராது. எடப்பாடி தரப்பில் இருந்து உங்களில் பல பேருக்கு எவ்வளவு அழுத்தம் வரலாம். அதனால், இனி கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் ஊரில் இருக்க வேண்டாம்.வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ போறதுக்கான ஏற்பாட்டை நானே பார்த்துக்கொள்கிறேன். நான் சொல்லும் வரை நீங்கள் அங்கேயே இருங்க. அநேகமாக நீங்க யாரும் தீபாவளிக்கு கூட உங்க சொந்த ஊரில் இருக்க முடியாது. வெளியில்தான் இருக்க வேண்டி வரும்.

நவம்பர் மாசம் 5-ம் தேதி வாக்கில் நீங்க சென்னைக்கு வந்தால் போதும். நவம்பர் மாசம் 10ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரை 22 தொகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். மக்களின் தொகுதி பிரச்னையை கவனிக்காத எடப்பாடி அரசை கண்டித்து பேசுவோம். எல்லா தொகுதிக்கும் நானே நேரில் வருகிறேன். ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, திருப்போரூர், பாப்பிரெட்டிப்பட்டி, குடியாத்தம், பெரம்பூர், பரமக்குடி, மானாமதுரை, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், சாத்தூர், ஆம்பூர், பூந்தமல்லி, சோளிங்கர், தஞ்சாவூர், அரூர், பெரியகுளம், அறந்தாங்கி, திருவாடானை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, ஆர்.கே.நகர் என முடிப்போம்.

இது நிச்சயமாக எடப்பாடி அரசுக்கு சவாலாக இருக்கும். உங்க துணையோடுதான் இதையெல்லாம் செஞ்சு முடிக்க முடியும். உங்க பயணம் குறித்த விபரங்களை விரைவில் சொல்றேன். ரெடியாக இருங்க. பத்திரமாக இருங்க எனக் கூறி இருக்கிறார்’ எனத் தெரிவித்தனர். ஆனால், குற்றாலத்தில் தங்க வைப்பதாக கூறப்படும் நிலையில், அந்த இடத்தில் மாற்றம் ஏற்படலாம். திசை திருப்பவே குற்றாலம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த தகவல்கள் அத்தனையும் சேலத்தில் இருந்த முதல்வருக்கு உடனடியாக உளவுத் துறை மூலமாக சொல்லப்பட்டு இருக்கிறது. 'அவங்க வெளியூர் கிளம்பும் முன்பாக பேசிப் பாருங்க. ஒன்று சேர்ந்து எல்லோரும் கிளம்பாமல் பார்க்கணும்...' என்று அமைச்சர்கள் சிலருக்கு அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி எனக் கூறபடுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close