அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Oct, 2018 04:14 am
jeyakumar-s-father-coming-soon-video-evidence

அமைச்சர் ஜெயகுமார் மீதான பாலியல் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், அடுத்து இது தொடர்பான முழு வீடியோ வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அமைச்சர் ஜெயகுமாருக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் எம்.பி.க்கு தம்பி பாப்பா பிறந்த கதையின் ஃப்ளாஸ்பேக் இது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரான போது நடந்த சம்பவம் அது. அமைச்சர் ஜெயகுமாரை சந்திக்க நிறைய பேர் அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். அவர்களுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து ஒரு டோக்கன் கொடுக்கப்படுமாம். அந்த டோக்கனை கொடுத்து அவரது வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு ஹோட்டலில் கொடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். அப்படித்தான் ஒருநாள் ஒரு பெண்ணும் அவரது அம்மாவும் வந்திருக்கிறார்கள்.

ஜெயகுமாரின் தொகுதி என்று சொல்லி தங்களை அறிமுகமும் செய்து கொண்டார்களாம். தாங்கள் குடியிருக்கும் வீட்டு ஒன்றின் பிரச்சினை தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் பரிந்துரை செய்யச் சொல்லித்தான் அமைச்சரைப் பார்த்தார்களாம். ‘நான் சொல்லி அனுப்புறேன்’ என்று சொல்லி இருவருக்கும் சாப்பிட டோக்கன் கொடுத்து அனுப்பினாராம் அமைச்சர் ஜெயக்குமார். அதன் பிறகும், சிலமுறை அமைச்சரைச் சந்திக்க அந்த அம்மாவும், மகளும் போனார்களாம். ஆனால், அவர்கள் பிரச்சினை தீரவில்லை.

ஒருநாள் அமைச்சரிடம் இருந்து அந்த மகளுக்கு போன் வந்திருக்கிறது. ‘உங்க ஏரியா ஏ.சி. இங்கே பந்தோபஸ்துக்கு வந்திருக்காரு. நான் அரவக்குறிச்சியில் இருக்கேன். நீ உடனே இங்கே வா பேசி முடிச்சிடலாம். வயசான காலத்துல உங்க அம்மாவை எதுக்கு இவ்வளவு தூரம் இழுத்துட்டு வர... நீ மட்டும் வா...’ என அமைச்சரே சொன்னதாக அந்தப் பெண் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணும் சென்னையிலிருந்து கிளம்பி திண்டுக்கல் போயிருக்கிறார். அங்கே நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அந்தப் பெண்ணுக்காக ஒரு ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. அவர் அங்கே காத்திருக்க... அமைச்சரும் அங்கே போயிருக்கிறார். அசிஸ்டண்ட் கமிஷனருடன் பேசியிருக்கிறார். வீடு பிரச்சினை சுமுக முடிவுக்கு வந்திருக்கிறது. அன்று இரவு அதே ஹோட்டலில் அந்தப் பெண்ணைத் தங்கவும் சொல்லிவிட்டாராம் அமைச்சர். தங்கியிருக்கிறார். அங்கேதான் எல்லாம் அரங்கேறியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுச் சொல்கிறார். தங்கிய ஹோட்டல் பில்கூட இப்போது அந்தப் பெண்ணிடம் ஒரு காப்பி இருக்கிறது.

அந்த ஓர் இரவுதான் சிபாரிசுக்குப் போன பெண்ணின் வயிற்றில் வாரிசைக் கொடுத்திருக்கிறது. மாதங்கள் ஓட... குழந்தையை வயிற்றில் சுமந்து நின்றிருக்கிறார் அந்தப் பெண். அமைச்சரிடம் அம்மாவும், மகளும் இந்தத் தகவலைச் சொல்லிப் பேச, அமைச்சரும் ஏதோ சொல்ல, விஷயம் அத்துடன் அடங்கிப்போகிறது. அப்போது நிகழ்ந்த உரையாடல்தான் இப்போது வைரலாகி வருகிறது. இந்தத் தகவல்கள் அப்போது எப்படியோ கசிந்து தினகரன் காதுக்குப் போக... வெற்றிவேல் மூலமாக அந்தப் பெண்ணை கஸ்டடி எடுக்கிறார்கள். 3ஆவது மாதமாகக் குழந்தை வளர ஆரம்பித்ததில் தொடங்கி முழுக்கவே தினகரன் குரூப் கஸ்டடியில் அந்தப் பெண் இருக்கிறார். மருத்துவமனையில் செக் அப்புக்கு போகும் போதே அப்பா பெயரை ஜெயகுமார் எனத் தெளிவாகப் பதிவு செய்கிறார்கள்.

பத்து மாதத்துக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட்டில் ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழிலும் அப்பாவின் பெயர் ஜெயகுமார் என பதிவிட்டு மாநகராட்சியில் சான்றிதழ் வாங்குகிறார்கள். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் சமயத்தில்தான் இந்த ஆடியோ ரிலீஸுக்கு நாள் குறித்திருந்தது தினகரன் டீம். ஆனால், ஜெயகுமார் தொடர்ந்து தினகரனைக் கடுமையாக விமர்சனம் செய்துவருவதால், அவருக்கு செக் வைக்கத்தான் உடனடியாக ரிலீஸ் செய்துவிட்டார்கள். அந்தப் பெண்ணையும் குழந்தையையும் நேரடியாக மீடியா முன்பு கொண்டு வந்து நிற்க வைப்பதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால்தான் இப்போது ஆடியோ மட்டும் வந்திருக்கிறது.

இதுதவிர, அந்தப் பெண்ணும் அவரது அம்மாவும் ஜெயகுமாரை சந்தித்துப் பேசுவது போலவும், கூட நிற்பது போலவும் ஒரு வீடியோவும் தினகரன் கையில் இருக்கிறது. இதுதவிர, அந்தப் பெண்ணுக்கு டெலிவரி ஆனது, குழந்தையின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதுவும் அடுத்தடுத்து வெளியே வரலாம்’ என்கிறார்கள்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close