#Me Too... மு.க.ஸ்டாலினுக்கு சிக்கல்..? கேலிச் சித்திரம் பகீர்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Oct, 2018 11:51 am
me-too-problem-for-mk-stalin-namadhu-amma-says

’மீ டூ’ பற்றி கருத்துத் தெரிவிப்பதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிக்கல்களும், சங்கடங்களும் இருப்பதாக அ.தி.மு.க நாளேடு விமர்சனம் செய்துள்ளது. 

’மீ டூ’ ஹேஷ்டேக் தினம் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஹாலிவுட் நடிகை அலீஸா மிலானோ தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து டுவிட்டரில் தெரிவித்துவிட்டு தன்னை போல் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இந்த ஹேஷ்டேக்கை ஆதரியுங்கள் எனக் கூறி 'மீ டூ' ஹேஷ்டேக்கை தொடங்கினார். தமிழகத்தில் இதனைப் பிரபலப்படுத்தியவர் சின்மயி. வைரமுத்து, அர்ஜூன், சிம்பு, தியாகராஜன் என அடுத்தடுத்து பாலியல் புகார்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து சினிமாத்துரையினர் மட்டுமின்றி, அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் இதுவரை ’மீ டூ’குறித்து வாய்திறக்கவில்லை. கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமானவர் வைரமுத்து என்பதால் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் இன்று ஒரு கேலிச்சித்திரம் வெளியாகி இருக்கிறது. அதில், ‘மீ டூ’ பற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து ஏதும் சொல்லாமல் இருக்கிறாரே? அதை ஆதரிப்பதில் அவருக்கு பல சிக்கல்கள், சங்கடங்கள் இருக்கலாம் போல!’’ எனக் குறிப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close