18 எம்.எல்.ஏக்களுடன் வெளிநாட்டுக்கு உல்லாச டூர்.. டி.டி.வி.தினரகரன் ஏற்பாடு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Oct, 2018 02:03 pm
t-t-v-dhinakaran-to-travel-abroad-with-18-mla-s

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கும் திட்டத்தில் அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வெற்றிவேலைத் தவிர 17 எம்.எல்.ஏக்கள் நேற்று மாலை விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து காரில் குற்றாலம் சென்றடைந்தனர். நெல்லை மாவட்டம், பழைய குற்றாலம் சாலையில்  அமைந்துள்ள இசக்கி ஹைவியூ ரிசார்ட்டில்  அவர்கள் தங்கியுள்ளனர். இந்த ரிசார்ட் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது அமமுக மாநில அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ளவருமான இசக்கி சுப்பையாவுக்குக் சொந்தமானது. இவரது மகனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகளை திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

                                                             இசக்கி ஹைவியூ ரிசார்ட்

இந்த சொகுசு விடுதியில், குடில்கள், குளிர்சாதன அறைகள், சூட் அறைகள் என 30 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த ரிசார்ட்டிற்கு மற்ற எம்.எல்.ஏக்களும் விரைவில் வர உள்ளனர். ஆயில் மசாஜ், அருவி குளியல், அசைவ விருந்து என அங்கே சில தினங்கள் அசத்திய பிறகு அடுத்த இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டு வருகிறார் தினகரன். கடந்த முறை போன எந்த ஊருக்கும் இல்லாமல், எல்லாமே புதிய ஊருக்கு அழைத்துப் போவதுதான் அவரது திட்டம். அதில் வெளிநாடுகளும் உண்டு. அதனால்தான், பாஸ்போர்ட் இல்லாதவர்கள் உடனடியாக பாஸ்போர்ட் வாங்கிடுங்க என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். இந்த டூர் பிளான் அனைத்தையும் செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்ச்செல்வனும் கவனித்து வருகிறார்கள்.

 

                                                              இசக்கி சுப்பையா

இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா வரும் வியாழக்கிழமை தீர்ப்பளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close