பில்லி சூனியம்... பூஜை சாமியார்...ஜெயக்குமார் இளம்பெண்ணை ‘அம்மாவாக்கிய’ பகீர் பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Oct, 2018 02:29 pm
how-did-jayakumar-get-pregnant

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இளம்பெண் தொடர்பான சர்ச்சை பெரிதாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக’’என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி இது. எந்தப் பரிசோதனைக்கும் நான் தயாராக உள்ளேன்” என மறுப்புத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார். 

பாதிக்கப்பட்ட சிந்து என்ற அந்த இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன? என விசாரித்தால் சம்பவங்கள் கோவளம் முதல் திண்டுக்கல் வரை நீள்கின்றன. ”சிந்து என்ற அந்த இளம்பெண் ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர். மீனவர சமுதாயத்தைச் சேர்ந்த அவருக்கு பல ஆண்டுகளாக திருமணம் தடை பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த அவரது குடும்பத்தினர் கோவளம் பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் சாமியாரை போய் பார்த்திருக்கிறார்கள்.

திருமணத்தடைக்கு பில்லிசூனியம்தான் காரணம். அதை அகற்றினால் திருமணம் நடக்கும் எனக் கூறியுள்ளார். இதற்காக கொஞ்சம் கொஞ்சமாக  ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அந்த சாமியார் கறந்துள்ளார். ஆனால், எந்தப் பலனுமில்லை. இதனால், கோபமான அந்தப் பெண்ணின் தாயார், சாமியாரிடம்‘நீங்க செஞ்ச பூஜை பலிக்கல. அதனால, ஒன்றரை லட்சம் பணத்தைத் திரும்பக் கொடுங்க’ எனக் கேட்டுள்ளார். அந்த முஸ்லிம் சாமியாரோ முடியாது என்று மறுத்திருக்கிறார். அந்தப் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொடுக்கம்படி ஜெயக்குமாரை அனுகி இருக்கிறார். ‘சரிம்மா நான் பேசி பணத்தைத் திரும்பத் தர ஏற்பாடு பண்றேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதற்காக பல முறை தாயும், மகளும் அமைச்சரை போய் பல முறை பார்த்திருக்கிறார்கள். 

ஒருநாள் அந்த இளம்பெண்ணிற்கு போன் போட்ட அமைச்சர் ஜெயக்குமார், ‘உன் பிரச்னைக்காக பேச இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. உடனே கிளம்பி வீட்டுக்கு வா’’ என அழைத்திருக்கிறார். தாயார் வெளியில் சென்றிருந்ததால் தனியே அமைச்சரின் வீடு தேடிப் போயிருக்கிறார் அந்த இளம்பெண். அமைச்சரின் வீட்டில் அப்போது யாரும் இல்லை என்றும், தன்னை முன் ஹாலில் அமரவைத்து அமைச்சர் ஜூஸ் கொடுத்து அவரும் குடித்தார் என்றும் சொல்லியிருக்கிறார் அப்பெண். அதுமட்டுமல்ல... ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் தான் மயங்கிவிட்டதாகவும் அப்பெண் சொல்கிறார். சில மணி நேரங்கள் கழித்து தான் வீட்டுக்குச் செல்லும்போது தனக்கு ஏதோ ஒரு அவலம் நடந்துவிட்டதை உடல் ரீதியாக உணர்ந்துகொண்ட அந்த இளம்பெண், அதை தன் தாயிடம் சொல்லிக் கதறியிருக்கிறார். 

இதனைக் கேள்விப்பட்டு பதறிய அந்தத் தாய் அமைச்சர் வீட்டுக்குப் போய் கதறி இருக்கிறார். நானே கல்யாணம் செய்துக்கிறேன் கவலைப்படாதேம்மா’ என ஜெயக்குமார் என்று சமாதானம் செய்து அனுப்பிவைத்திருக்கிறார். அதன் பின் பலமுறை ஜெயக்குமார் அழைக்க, கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ற அவரது வார்த்தையில் நம்பிய அந்தப் பெண்ணும் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போயிருக்கிறார்” என்று நிறுத்திய அந்தப் பெண்ணின் தரப்பினர், திண்டுக்கல் திருப்பத்தையும் விவரிக்கின்றனர். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஜெயக்குமார் சில மாத்திரைகள் கொடுப்பதையும், அதை அந்தப் பெண் சாப்பிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். பிறகுதான் அது கரு உருவாவதைத் தடுக்கும் மாத்திரை என்று அந்தப் பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது.

உடனே, ‘என்னை எப்போது கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?’ என்று அப்பெண் கேட்க, அப்போது ஜெயக்குமாரின் பதிலில் தொனி மாறியிருக்கிறது. ஆக, தன்னை இவர் திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று கருத ஆரம்பித்தார் அந்தப் பெண், அந்த நேரம்தான் அரவக்குறிச்சி மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஜெயக்குமாரும் அங்கே முக்கியப் பொறுப்பாளர். திடீரென ஒருநாள் ஜெயக்குமாரிடம் இருந்து போன். அந்த இளம் பெண் இம்முறை ஒரு முடிவோடு கிளம்பியிருக்கிறார். ஜெயக்குமார் சொன்னபடி திண்டுக்கல் விவேரா கிராண்ட் விடுதியில் 219-ம் எண் கொண்ட அறை புக் செய்யப்பட்டிருந்தது.

நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அந்த அறையில் இருவரும்  தங்கியிருக்கிறார்கள். அப்போது வழக்கம் போல் ஜெயக்குமார் மாத்திரையைக் கொடுக்க, ‘மாத்திரை கொடுத்து ஏமாற்றுவதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண் மாத்திரை சாப்பிடுவது போல் நடித்துள்ளார். அதன் பின் சில பல முறை இப்படி நடக்க, மாத்திரையும் போடாமல் விட்டதால் அந்த இளம் பெண் வயிற்றில் கருத்தரித்தது. மீண்டும் கருத்தரித்த விஷயத்தை, தாயும், மகளும் ஜெயக்குமாரிடம் சொல்ல, அதை கலைக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி இருக்கிறார் ஜெயக்குமார். ஆனால், அதை மறுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளப் போராடி இருக்கிறார் அந்தப்பெண். அதற்குள் குழந்தையும் பிறந்துவிட்டது. அரசு மாறிய பிறகு ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கலாம் என்று காத்திருந்த நிலையில் ஜெயக்குமார் தரப்பினரின் தொடர் மிரட்டலால்தான் இந்த விஷயங்களை வெளியே சொல்லவே அந்தப் பெண்ணும் தாயும் முடிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் அமைச்சர் சொல்வது உண்மையா? அந்த இளம்பெண் சொல்வது உண்மையா? என்பது முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே வெளிச்சத்திற்கு வரும்.  

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close