தி.மு.க., எம்.எல்.ஏ-வைக் கண்டு பதுங்கிய அ.தி.மு.க அமைச்சர்கள்: வீடியோ

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Oct, 2018 04:34 pm
aiadmk-ministers-who-saw-dmk-mla-s-standing

தி.மு.க எ,.எல்.ஏ-வான மகேஷ் பொய்யாமொழியை பார்த்ததும் எழுந்து நின்று அ.தி.மு.க அமைச்சர்கள் பவ்யம் காட்டிய நிகழ்வு திருச்சியில் வேகமாக பரவி வருகிறது. 

சமீபத்தில், தொகுதி மக்களின் குறைகள் தொடர்பாக, திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனை பார்க்க, திருவெறும்பூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழி சென்றார். அங்கே, உள்ளூர் அமைச்சர்களான நடராஜனும், வளர்மதியும் கமிஷனர் அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது உள்ளே வந்த மகேஷ் பொய்யாமொழியை பார்த்து, இரு அமைச்சர்களும் அவசர, அவசரமாக எழுந்து, கைகூப்பி வரவேற்றார்கள். அதில், தவறேதுமில்லை. ஆனால், மகேஷ் பொய்யாமொழி, கமிஷனரிடம் பேசிவிட்டு வரும் வரை இரு அமைச்சர்களும், மரியாதையோடு நின்று பவ்யம் காட்டினார்களாம்.  இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட, அ.தி.மு.க.,வினர் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

அந்த அமைச்சர்கள் இருவரும் இப்படிப் பவ்யம் காட்டக் காரணம் என்ன தெரியுமா? தற்போதைய நிலையில், மகேஷ் பொய்யாமொழி தி.மு.க-வில் மட்டுமல்ல ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவர். அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதிவி மகேஷுக்கு நிச்சயம். ஸ்டாலினை பெரியப்பா எனவும், துர்கா ஸ்டாலினை பெரியம்மா என்றும் அழைப்பவர். 

உதயநிதி ஸ்டாலினின் உயிர் நண்பர். ஸ்டாலினின் நிகழ்ச்சிகளை அவரது மருமகன் சபரீசனோடு சேர்ந்து உருவாக்குபவர். ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும் பள்ளிக்கூட விவகாரங்களைத் தீர்த்து வைப்பவர். இப்படி ஸ்டாலின் குடும்பத்தில் ஒரு அங்கமாக வலம் வருபவர். இதனையெல்லாம் மனதில் வைத்துத் தான் அந்த இரு அமைச்சர்களும் எழுந்து நின்று பவ்யம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close