அரசியல் சட்டத்தை அவமதிக்கும் ஆளுநர்: ராமதாஸ் கடும் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 06:21 pm
pmk-condemned-tn-governor-for-releasing-rajiv-gandhi-case-convicts

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் பதிலளிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் இன்று வரை முடிவெடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக் காததை பா.ம.க கண்டிக்கிறது.

மத்திய அரசு போட்ட முட்டுக்கட்டைக் காரணமாக கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வந்த நிலையில், இந்திய அரசியலமைப்புசட்டத்தின் 161-வது பிரிவின்படி அவர்களை விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 

மாநில அமைச்சரவை அளித்த இந்த பரிந்துரையை ஆளுநர் உடனடியாக ஏற்றுக்கொள்ளுவதுதான் இயற்கை நீதி ஆகும். அதற்கு மாறாக அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதன் மூலம் அவர்களின் விடுதலையை தடுக்க முயல்வது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். இந்தப்போக்கை கைவிட்டு 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுநர் விரைந்து பிறப்பிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close