தத்ரூபமான ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை ஆந்திராவில் இருந்து வருகை!

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 06:51 pm
jayalalitha-s-statue-came-from-andhra

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சிலை தயார் செய்யப்பட்டு ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5, 2016 அன்று உயிரிழந்தார். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த அவரது முழுவுருவச் சிலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 24 அன்று நிறுவப்பட்டது. ஆனால், அந்த சிலையின் முகம் ஜெயலலிதாவின் முகம் போன்று இல்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.  

இதையடுத்து விரைவில் இந்த சிலை மாற்றப்படும் என அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. ஆந்திராவிலிருக்கும் ரமேஷ் என்கிற சிற்பி தலைமையிலான குழு இதனை தயாரித்துள்ளது. விரைவில் தற்போதுள்ள சிலை அகற்றப்பட்டு அங்கு இந்த புதிய சிலை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மிகவும் தத்ரூபமாக உள்ளது எனவும் மக்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close