’மனசு மாறி வருவாரு...’ அமைச்சருக்காக காத்திருக்கும் எம்.பி., தம்பி பாப்பாவின் ’தாயார்’!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Oct, 2018 11:32 am
mp-waiting-for-a-minister-his-brother-s-mother

திரும்பிய பக்கமெல்லாம் எம்.பி.க்குத் தம்பிப் பாப்பா பிறந்த கதைதான் பேச்சாக இருக்கிறது. இதனை அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக மறுத்தாலும், அத்தனை எளிதாக விடுவாதாக இல்லை தினகரன் அணி. 

இந்த விவகாரத்தில் திரட்டி வைத்திருக்கும் அடுத்த ஆதாரங்களை வெளியிடத் தயாராகி வருகிறது தினகரன் தரப்பு. கடந்த டிசம்பர் மாதமே சம்பந்தப்பட்ட  சிந்து என்கிற அந்தப் பெண்ணிடம் பேசி, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் அலுவலகத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். என்னவெல்லாம் நடந்தது என்பதை அந்தப் பெண் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார். அதை அவருக்கே தெரியாமல் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பிறகுகே அப்பெண்ணின் தாயாரை ஜெயகுமாரிடம் பேச வைத்துள்ளனர். ஜெயகுமாரிடம் பெண்ணின் அம்மா பேசிய ஆடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இதுதவிர இன்னும் வெளி வராத ஆடியோ ஒன்றும் தினகரன் தரப்பில் கைவசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ஆடியோவில் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் அமைச்சர் ஜெயகுமாரிடம், ‘ஏங்க நான் வீட்டுக்கு வெளியேதான் நிற்கிறேன்...’ என்று சொல்ல... ‘அப்படியா... இரு.. கதவை திறக்கச் சொல்றேன் உள்ளே வா...’ எனச் சொல்கிறது ஒரு குரல். அது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் என்கிறார்கள். இது மட்டும்தான் அந்தப் பெண்ணும், அமைச்சரும் பேசிய நேரடியான ஆடியோவாக தினகரன் தரப்பிடம் இருக்கிறது. அந்தப் பெண்ணை மாதம் தோறும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதெல்லாம் தினகரன் அணியிலிருந்து ஒருவர் உடன் சென்றிருக்கிறார். மருத்துவமனை செலவுகள் அத்தனையும் தினகரன் தரப்பே செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்தப் பெண் ஹாஸ்பிட்டல் போவதில் தொடங்கி, அவர் புலம்பித் தீர்ப்பது வரை எல்லாம் வீடியோ பதிவாகி இருக்கிறது.

சம்பந்தப்பட்ட அந்தப் பெண், சென்னையில் முன்பு இருந்த அதே வீட்டில்தான் இன்னும் இருக்கிறாராம். அவரது வீட்டுக்கு மாநகராட்சி ஊழியர்கள் இருவர் போயிருக்கிறார்கள். ’உங்களுக்கு எப்போ குழந்தை பிறந்துச்சு? எங்கே அப்ளை பண்ணி பர்த் சர்பிகேட் வாங்கினீங்க?’ எனக் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணோ, ‘எனக்கு எதுவும் தெரியாது. அம்மா வெளியில போயிருக்காங்க. அவங்க வந்த பிறகு வாங்க...’ எனக் கதவைக்கூட முழுமையாகத் திறக்காமல் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

தற்போது வைரலாகியிருக்கும் ஆடியோ வெளியானதுமே அந்தப் பெண்ணிடம், பேசிய தினகரன் தரப்பு ஆட்கள், ‘நீங்க எங்ககிட்ட சொன்னதை எல்லாம் அப்படியே வந்து மீடியா முன்னாடி சொல்லுங்க. அப்போதான் உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் நியாயம் கிடைக்கும்’ எனப் பேசியிருக்கிறார்கள். அதற்கு அந்த பெண்ணோ, ‘அவரு எனக்கு துரோகமே பண்ணி இருந்தாலும் அதுக்காக அவரை பழி வாங்குறது என் நோக்கம் இல்லை. அவரு ஒரு நாள் மனசு மாறி வருவாரு. அதுவரைக்கும் நான் காத்திருக்கேன். டிவிகாரங்ககிட்ட எல்லாம் வந்து என்னால இதைச் சொல்ல முடியாது...’ என்று மறுத்துவிட்டாராம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close