ஸ்டாலினின் முதல்வர் கனவை தகர்க்கும் போட்டி.. டி.டி.வி-எடப்பாடியை முந்தும் உதயநிதி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Oct, 2018 06:06 pm
udayanidhi-new-party-in-dmk-will-find-stalin

மக்களவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர் பட்டியலால் தி.மு.க-வுக்குள் அதிருப்தி வெடித்திருக்கிறது. மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக மற்றொரு கோஷ்டி வளரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலுக்காக 40 தொகுதிகளுக்கும் தலா இருவர் வீதம் 80 பேர் அடங்கிய பொறுப்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் தி.மு.க தலைமை வெளியிட்டது. இந்த லிஸ்டில் ஏற்கெனவே அமைச்சராக, எம்.பி., எம்.எல்.ஏ-க்களாக இருந்த பலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல தேர்தலை சந்தித்தவர்கள். அதே நேரம், உதயநிதிக்கு வேண்டிய நண்பர்களான புதிய முகங்களுக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு தேர்தல் அனுபவமே கிடையாது. இதனால், முன்னாள் அமைச்சர்களாக இருந்து தற்போது மாவட்டச் செயலாளர்களாக இருக்கிற அனுபவஸ்தர்களிடம், இந்த பொறுப்பாளர்களால் எப்படி வேலை வாங்க ம்ஜுடியும் என மூத்த நிர்வாகிகள் கையைப் பிசைந்து நிற்கிறார்கள். புதிய பொறுப்பாளர்களால் மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக மற்றொரு கோஷ்தான் வளரும் என கவலைப்படுகிறார்கள் உடன்பிறப்புகள்! மு.க.ஸ்டாலினிடம் இது பற்றி எடுத்துக் கூறத் தயங்குகிறார்கள் கட்சியில் உள்ள சீனியர்கள். காரணம், அந்தப்பட்டியலை உருவாக்கியதே ஸ்டாலின் தான்.

மகனின் பாசம் அவரது கண்ணை மறைப்பதால் இப்படி ஸ்டாலின் நடந்து கொள்கிறார்.. இது எங்கே போய் முடியுமோ’’ எனப்புலம்புகிறார்கள் தி.மு.க-வினர். மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவை தகர்க்க, எடப்பாடியோ, டி.டி.வி.தினகரனோ வேண்டாம். உதயநிதி ஒருத்தரே போதும் எனக் கிண்டலடிக்கிறார்கள் எதிர்க்கோஷ்டி தி.மு.க.வினர்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close