’அம்மாவான’ பெண்ணை கண்டுக்காதீங்க... ஜெயக்குமாருக்கு அட்வைஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Oct, 2018 06:06 pm
do-not-forget-the-mother-girl-advice-for-jayakumar

எம்.பி ஒருவருக்கு தம்பிப் பாப்பா பிறந்திருக்கிறது என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் பொடி வைத்து பேசும்போதே அந்த அஸ்திரம் பாயப்போவது தம் மீதுதான் என்பதை உணர்ந்து கொண்டாராம் அமைச்சர் ஜெயக்குமார். 

இந்த விவகாரங்களை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி போயிருந்த சமயத்திலேயே முதல்வர் எடப்பாடியிடம் சொல்லி இருக்கிறார் ஜெயகுமார். ஆனால், ஆடியோ வெளியாகும் என்பதை ஜெயகுமார் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆடியோ வெளியான பிறகு  முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். 

தம்பிதுரையும் முதல்வரிடம் பேசினாராம். அதற்கு முதல்வர் தரப்பிலோ, ‘சம்பந்தப்பட்ட யாரும் இதுவரை நேரடியாக வந்து புகார் சொல்லவில்லை. ஆடியோவை வைத்துக் கொண்டு நாம எந்த முடிவுக்கும் வர வேண்டிய அவசியம் இல்லை. எப்படி இருந்தாலும் இது தினகரன் ஆட்கள் திட்டம் போட்டு செஞ்சதுன்னு அப்பட்டமாகத் தெரியும். பிரச்சினை வந்துடுச்சு. சமாளிச்சுதானே ஆகணும்.

ஜெயகுமாரை தைரியமாக இருக்கச் சொல்லுங்க... நானும் அவர்கிட்ட பேசுறேன். அதே நேரத்துல அந்தப் பெண்ணை சமாதானப் படுத்துறேன்னு யாரும் இப்போ அங்கே போக வேண்டாம். ஜெயகுமாரை சிக்க வைக்க என்ன வேணும்னாலும் அவங்க ப்ளான் பண்னியிருப்பாங்க. கொஞ்சம் ஆறப்போடுங்க. பார்த்துக்கலாம்...’ என்று முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறுகிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close