‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 01:21 pm
case-files-against-sarkar

‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்'  படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல் சார்ந்த கதைகளத்தில் இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற தீபாவளியன்று நவம்பர் 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் சர்கார் படத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் அளித்துள்ள மனுவில், 'செங்கோல் என்ற பெயரில் சங்கத்தில் நான் ஒரு கதையை பதிவு செய்திருந்தேன். ஆனால் அந்த கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் விஜயை வைத்து 'சர்கார்' என்ற பெயரில் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close