18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

  திஷா   | Last Modified : 25 Oct, 2018 02:32 pm
18-mla-disqualification-case

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக இருக்கிறது. 

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். 

இதனால் 18 தொகுதிகளும் காலியானதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என இன்னொரு நீதிபதியும் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. 

இதனால் இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப் பட்டது. மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணா இவ்வழக்கை முழுவதும் விசாரித்து முடித்திருப்பதால், இதன் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது. 

இது தமிழக அரசியல் வட்டாரங்களை மீண்டும் பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close