ஆர்.கே.நகராகும் 18 தொகுதிகள்; டி.டி.வி.தினகரன் அதிரடி... எடப்பாடி அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 25 Oct, 2018 01:39 pm
r-k-nagar-is-18thassembly-constituency-t-t-v-dinakaran-s-action

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு செல்லும் என்கிற தீர்ப்பால் டி.டி.வி.தினகரன் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலைச் சந்திக்கும் முடிவெடுத்திருப்பதாக அ.ம.மு.க நிர்வாகிகள் கூறுகின்றனர். 

இதுகுறித்து அவர்கள், ‘’18 சட்ட மன்றத் தொகுதியை இந்த அரசு திட்டமிட்டு புறக்கணித்து விட்டது. மேல்முறையீட்டுக்குச்செல்ல விரும்பவில்லை. ஏற்கெனவே காத்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்றால் மேலும் காலதாமதம் ஆகலாம். அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும். மீண்டும் நீதிமன்றம் செல்வதற்குப் பதிலாக மக்கள் மன்றத்திற்கு செல்வதே உண்மைமையான தீர்வாக இருக்கும். 
அண்ணனை நம்பி வந்தவர்களை அவர் கைவிட மாட்டார். இந்த 18 பேரையும் அவர்களது தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தி மீண்டும் எம்.எல்.ஏக்களாக்கி எடப்பாடி அரசை வீழ்த்தி முதலமைச்சர் பதவியை மீட்டெடுப்பார். 

இடைத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்துவிட்ட நிலையில், அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் தொகுதிவாரியாக போராட்டம் நடத்த உள்ளோம்.  எங்களுக்குத் தோல்வி பயம் இல்லை. எங்களுக்கு இந்தத் தீர்ப்பால் எந்த பாதகமும் இல்லை. அதைப்பற்றிய கவலையும் இல்லை. 18 தொகுதிகளிலும் வென்ற பின்னர், சில அமைச்சர்கள் மற்றும் முதல்வரை மாற்றிவிட்டு ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவோம். 
இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பான ஆலோசனை நடத்துவதற்காக வரும் 27-ம் தேதி, அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் மதுரை வருகிறார்’’ எனக் கூறுகிறார்கள். 

இடைத்தேர்தலை சந்திப்பதில் தயங்கிய சிலரை அழைத்த தினகரன், 18 தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நினைத்தே உங்களைக் களமிறக்குகிறேன். வெற்றியும், தோல்வியும் உங்களோடது அல்ல. என்னுடையது. ஆர்.கே.நகரைப்போல 18 தொகுதிகளும் அதிரடியாக வெற்றிகளைப்பெறுவோம். அதற்கான திட்டங்கள் என்னிடம் இருக்கிறது. தேர்தல் செலவுகளை நீங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. 18 தொகுதிகளுக்குமான மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்.  கவலைப்படாமல் களத்தில் இறங்குங்கள்’ எனக்கூறி உற்சாகப்படுத்தி இருக்கிறார் டி.டி.வி.தினகரன். 

தினகரனின் இந்த முடிவு எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இடைத்தேர்தல் நடந்தால் அதில் 9 தொகுதிகளில் எடப்பாடி அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைக் காப்பாற்ற முடியும். தற்போதுள்ள சூழலில் ஓரிரு தொகுதிகளை எடப்பாடி அணி வெற்றி பெறுவதே சந்தேகம் என உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. மறுபுறம் இந்த ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலினும் வெறியோடு காத்திருக்கிறார். வலுவாக இருக்கும் டி.டி.வி.தினகரன், மு.க.ஸ்டாலினைத் தாண்டி எடப்பாடி அரசால் 18 தொகுதிகளில் வெல்ல இயலாது.  இடைத்தேர்தலைச் சந்தித்தாலும் ஆட்சி கவிழ்வது உறுதி என்பதால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close