அ.தி.மு.க மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது: முதல்வர் மகிழ்ச்சி

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 02:16 pm
mlas-disqualification-case-cm-edappadi-palanisamy-press-meet

18 சட்டமன்ற  உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், அதை அ.தி.மு.க வரவேற்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை நீதிபதி சத்தியநாராயணன் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், கே.சி வீரமணி, தங்கமணி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த அனைத்து தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என கூறிய முதல்வர் பழனிசாமி, இடைத்தேர்தலை சந்திக்க  அ.தி.மு.க தயாராக உள்ளது எனவும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று சிறந்த ஆட்சியை அ.தி.மு.க தொடரும் என்றும் கூறினார். 

தொடர்ந்து அவர், கடந்த முறைபோல் நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். மேலும், அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத தினகரனின் விமர்சனங்களை பற்றி கவலை இல்லை .எந்த அனுபவத்தை அவர் கூறுகிறார் என்பது தன் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close