சர்கார் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 02:09 pm
madras-hc-refuses-to-ban-sarkar-movie

‘சர்கார்’ படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும், அப்படம் வெளியாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்'  படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல் சார்ந்த கதைகளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் வருகிற தீபாவளியன்று நவம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் சர்கார் படத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் அளித்துள்ள மனுவில், 'செங்கோல் என்ற பெயரில் தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்தில் நான் ஒரு கதையை பதிவு செய்திருந்தேன். ஆனால் அந்த கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் விஜயை வைத்து 'சர்கார்' என்ற பெயரில் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், படம் வெளியாக தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கமும் வருகிற 30ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close