எடப்பாடி தலைக்குமேல் கத்தி... டி.டி.வி.தினகரனுடன் மிரட்டும் மு.க.ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 25 Oct, 2018 02:37 pm
m-k-stalin-to-intimidate-edappadi-with-t-t-v-dhinakaran

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி இப்போது ஊசலாட்டத்தில் இருக்கிறது. 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் அவரது ஆட்சியை தக்கவைக்க 9 தொகுதிகளில் கட்டாயம் வெல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்கிற தீர்ப்பிற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214ஆகக் குறைந்திருக்கிறது.  234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் ஆகியோர் மரணமடைந்து விட்டதால், 232 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்குப் பிறகு 214 ஆகக் குறைந்திருக்கிறது.

இதில், தி.மு.க. காங்கிரஸ் இந்தியன் முஸ்லீம் லீக் கூட்டணியைச் சேர்ந்த 97 உறுப்பினர்கள் உள்ளனர். டிடி.வி.தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இப்போது டி.டி.வி.தினகரன் அணியில் அறந்தாங்கித் தொகுதி ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதி கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மீதமுள்ள  உறுப்பினர்களில் எஸ்.கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அவர்களும் அ.தி.மு.கவின் உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர். இவர்களில் கருணாஸ் வெளிப்படையாக ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். மீதமுள்ள இருவரும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

எடப்பாடி அணியில் தற்போதைய நிலையில், 110 உறுப்பினர்கள் உள்ளனர். சபாநாயகர்  தனபாலைத் தவித்தால், எடப்பாடி உறுப்பினர்களின் பலம் 109 ஆக உள்ளது. திருப்பரங்குன்றம், திருவாரூர் மற்றும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தினால் அதில், பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அணி 9 தொகுதிகளில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஆனல், பலம் வாய்ந்த தி.மு.க-வையும், செல்வாக்கு நிறைந்த டி.டி.வி.தினகரனையும் எதிர்க்கொண்டு எடப்பாடி பழனிசாமி அணி 9 தொகுதிகளை வெல்வது கடினம். 
தொகுதிகள் காலியாக இருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர் ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்பது விதி. அப்படி 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். 
அல்லது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை, மழை, வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணியம் தள்ளி வைத்ததைப்போல ஏதாவது காரணம் காட்டி 18 தொகுதிகளின் தேர்தலை ஒத்தி வைத்தால் எடப்பாடி அரசு தப்பலாம். 

ஆனால், அதற்கு மத்திய அரசு மனசு வைக்க வேண்டும். அப்படி மத்திய அரசு கை கொடுத்தால் இந்த அரசு இழுத்துப்பறித்து ஏதோ காலத்தை ஓட்டலாம். ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அது எப்போதும் பதம் பார்க்கலாம்.
தப்புமா எடப்பாடி பழனிசாமி அரசு..?    

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close