இளவரசி 15 நாட்கள் பரோலில் விடுவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 03:27 pm
ilavarasi-gets-parole

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் இளவரசி 15 நாட்கள் பரோலில்  விடுவிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2017 பிப்ரவரி 14 ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஜெயலலிதா காலமானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த நிலையில் இளவரசி 15 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது தம்பிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க பரோல் வேண்டும் என விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, சசிகலா அவரது கணவர் நடராஜன் மறைவுக்கு பரோலில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close